உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் செந்தூர் வருதல் 203 கீழ்க்கணக்கு என்று பழைய நூல்களிலும் மூன்று வரிசைகள் இருக் கின்றன. எல்லாத் தத்துவங்களிலும் முதலாவதாக இருப்பது சிவ தத்துவம். அது போலச் சங்க நூல்கள் எல்லாவற்றிலும் முதலா வதாக இருப்பது திருமுருகாற்றுப்படை என்று சொல்லலாம். று திருமுருகாற்றுப் படையைப் பாடிய நக்கீரர் காளஹஸ்திக்குச் சென்று பொன்முகரி ஆற்றில் நீராடினார். கைலாச தரிசனத்தைப் பெற்றார். கயிலை பாதி காளந்தி பாதி அந்தாதி என்ற நூலைப் பாடினார். கண்ணப்பரைத் தரிசித்துப் பாடினார். சிவபெருமானுக்கு அபராதம் செய்வதனால் வரும் தீமைகளையும், அவனுடைய வழி பாட்டினால் வருகின்ற நன்மைகளையும் கோபம் பிரசாதம் என்ற நூலில் எடுத்துக்காட்டிப் பாடினார். பின்பு மதுரை வந்து சேர்ந்தார். அப்படிப் பாட்டினால் இறைவனை வழிபட்டவர் நக்கீரர். கந்த புராணக்காரர் சொல்கிறார். அதனைக் கீரனே மடவார் பலந்த ரும்வழி பாட்டினால் பாட்டினால் பரளைக் கலந்து முத்திசேர் தென்பெருங் கயிலையும் கண்டான். காளஹஸ்திக்குத் தட்சிண கைலாசம் என்ற பெயரும் உண்டு. முருகப் பெருமான் காளஹஸ்தியைத் தரிசனம் பண்ணிக் கொண்டு தென்திசை நோக்கி எழுந்தருளினான். திருவாலங்காடு வந்து தரிசித்தான். அங்கே சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறான். காரைக்கால் அம்மையாருக்குத் தரிசனம் கிடைத்த இடம். காளியோடு வாதாடி நடனத்தில் அவள் தோற்கும்படியாகச் சிவபெருமான் ஊர்த்துவ நடனம் ஆடிய இடம் அது. திருவெண்ணெய்நல்லூர் அதன் பிறகு காஞ்சிபுரம் வந்து தரிசனம் செய்து கொண்டு திரு வெண்ணெய் நல்லூரை அடைந்தான். திருவெண்ணெய்நல்லூரில் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவன் திருவருளைப் பெற்றார். அவர் சிவாசாரியார் குலத்தில் தோன்றியவர். கச்சியப்ப சிவாசாரியர் எப்போதும் அவரைப்பற்றி அன்போடு பேசுவார். ஆகவே சுந்தரமூர்த்தி நாயனார் அருள்பெற்ற திருவெண்ணெய் நல்லூருக்குத் தனியாக ஒரு பாட்டுப் பாடுகிறார்.