204 மண்ணுல கிறைவன் செய்யும் கந்தவேள் கதையமுதம் மணந்தனை விலக்கி எண்தோள் அண்ணல்ஓர் விருத்தன் போல்வந் தாவண ஓலை காட்டித் துண்ணென வழக்கில் வென்று சுந்தரன் றனை ஆட் கொள்ளும் பெண்ணையம் புனல்சூழ் வெண்ணெய்ப் பெரும்பதி தனையும் கண்டான். - (வழிநடைப், 12.) துண்ணென விரைவில், - [மண்ணுலகு இறைவன் - நரசிங்க முனையரையன். எண் தோள் அண்ணல் சிவபெருமான். ஆவணலை முறி எழுதிய ஓமை. வெண்ணெய்ப் பெரும்பதி - திருவெண்ணெய்நல்லூர்.] ய சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்பது அவருடைய பழைய நிலையை எண்ணிச் சொல்கின்ற பெயர். ஆருரர் என்பது அவருடைய தந்தையார் இட்ட திருநாமம். ஆலகால விஷத்தைப் பாற்கடலி லிருந்து எடுத்து வந்ததனால் ஆலால சுந்தரன் என்ற பெயரும் உண்டாயிற்று. அம்பிகைக்குத் திருத்தொண்டு செய்துகொண் டிருந்த இரண்டு பெண்கள்மேல் மனம் வைத்ததனால், "அவர்களுடன் பூலோகத்திற்குச் சென்று வாழ்ந்து வா" என்று இறைவன் அவருக்கு அனுக்கிரகம் பண்ணினான். அதனால் சுந்தரமூர்த்தி பூலோகத்தில் அவதரித்தார். சடையனார் என்ற திருநாமமுள்ள சிவசாரியாருக்குப் பிறந்த அவர் பக்கத்திலுள்ள திருக்கோவலூரில் இருந்த நரசிங்க முனையரை யரால் வளர்த்து வரப்பெற்றார். இப்படி அரசருடைய நிலையும், அந்தணருடைய நிலையும் ஒருசேர வளர்ந்தவர் சுந்தரர். அவருக்கு மணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார்கள். "உன்னை நான் தடுத்து ஆட்கொள்வேன்' என்று இறைவன் வாக்குக் கொடுத்த படி, மணக்கோலத்தோடு சுந்தரர் இருந்தபோது இறைவன் ஒரு கிழவராக அங்கே வந்து சேர்ந்தான். "என்னைக் கேட்காமல் நீ எவ்வாறு திருமணம் செய்து கொள்ளலாம்? நீ என் அடிமை அல்லவா?" என்றான். "நீ பித்தனே. பேயனே ?" என்று எதிர்த்து பித்தனோ,பேயனோ?" வாதாடிய சுந்தரர், "ஒரு பிராமணன் வேறு அந்தணனுக்கு அடிமை யாவது உண்டா?" என்று கேட்டார். உடனே இறைவன், "நான் பித்தன் ஆகட்டும். பேயன் ஆகட்டும். எனக்கு வழிவழி அடிமை செய்வதாக உன் பாட்டனார்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/224
Appearance