முருகன்-செந்தூர் வருதல் 205 எழுதிக் கொடுத்த ஓலை என்னிடத்தில் இருக்கிறது" என்றான். அதைக் காட்டு" என்றவுடன் இறைவன் காட்டினான். அதைக் கோபத்தோடு வாங்கிக் கிழித்தெறிந்தார் சுந்தரர். நீ இதைக் கிழித்தெறிந்ததனாலேயே குற்றவாளி என்பது தெரிகிறது " என்று சொல்லி,"நல்ல வேளை / படியோலை இது. மூல ஓலை வேறு இருக் கிறது. வழக்கு மன்றத்தில் வழக்காடலாம் " என்று சொன்னார். அந்தக் காலத்தில் ஒவ்வோர் ஊரிலும் சபை இருக்கும். அதற்கு அறங்கூறவையம் என்று பெயர். "திருவெண்ணெய்நல்லூரில் உள்ள சபைக்கு வா" என்று முதியவர் சுந்தரரை அழைத்துப் போக, சுந்தரமூர்த்தி அங்கே சென்றார். இறைவன் அந்தச் சபையினரிடம் முறையிட்டான்; தன்னிடம் இருந்த மூல ஓலையை எடுத்துக்காட்டி னான். அது சுந்தரமூர்த்தி நாயனாரின் பாட்டனார், 'நானும் என் பரம்பரையும் உனக்கு வழிவழி அடிமை “ என்று எழுதிக்கொடுத்த ஓலை. அது பாட்டனாரின் கையெழுத்துத்தான என்பதைப் பார்க்க ஆவணக்களரியில் இருந்த ஓலையைத் தேடிப் பார்த்தார்கள். அதி லிருந்து கிடைத்த ஓலையை வைத்து ஒப்பிட்டுப் பார்த்து, அது அவரது பாட்டனார் எழுதியதுதான் என்று தீர்மானம் பண்ணினார்கள். கந்தரரை அழைத்து, “நீ அவருக்கு அடிமைதான் என்று தீர்ப்ப ளித்தார்கள். திருவெண்ணெய்நல்லூரில் உள்ளவர்களுக்கு, இறை வனாக வந்த கிழவரைத் தெரியவில்லை. "நீங்கள் எங்கே இருக்கி றீர்கள்?" என்று கேட்டார்கள். "நீவிர் என்னை அறியவில்லையோ? நான் இருக்கும் இடம் இதோ இருக்கிறது " என்று சொல்லி, சுந்த ரர் பின் தொடர்ந்து வர, அப்பெருமான் தன் கோவிலுக்குள் சென்று மறைந்தான்; ரிஷபாரூடனாகத் தரிசனம் அளித்தான். அது கண்ட சுந்தரர் உண்மையை உணர்ந்து, "என்னை ஆட்கொண்ட பெருமானே, உன்னை நான் எவ்வாறு வழிபடுவேன் ?" என்று ஏங்க, "என்னைப் பித்தன் என்று சொன்னதனால் பித்தன் என்று வைத்தே பாடுவா யாக என்றான். " "த்தா முறைசூடி பெருமானே அருளாளா என்று சுந்தரர் பாடத் தொடங்கினார். இந்தக் கதையைத்தான் எருக்கமாகக் கச்சியப்ப சிவசாரியார் இந்தப் பாட்டில் சொல்கிறார்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/225
Appearance