206 சேய்ஞலூர் நிகழ்ச்சிகள் கந்தவேள் கதையமுதம் இப்படி முருகன் பல தலங்களையும் பார்த்துக்கொண்டு, காவேரி ஆற்றிலிருந்து பிரிகின்ற ஆறாகிய மண்ணியாற்றின் கரைக்கு வந்து சேர்ந்தான். அதற்குச் சுப்பிரமணிய நதி என்று பெயர். முருகன் அதனை உண்டாக்கினதாக ஐதிகம். அதுவே மண்ணி நதி என்று சுருங்கி வழங்குகிறது. அகத்திய முனிவருடைய கமண்டலத்திலிருந்து தோன்றிய காவேரி கடலோடு கலப்பதற்கு முன்பு, வெவ்வேறு ஆறுகளாகப் பிரிந்து பல நாமங்களைத் தாங்குகிறது. அப்படிப் பிரிகின்ற நதிகளுள் காவேரிக்கு வடக்கிலுள்ள மண்ணியாறு ஒன்று. அங்கே கருணை வள்ளலாகிய முருகன் வந்து சேர்ந்தான். குடமூளி கரத்தில் ஏந்தும் குண்டிகை யிருந்து நீங்கிப் படிதனில் வேறு வேறாய்ப் பற்பல நாமம் தாங்கிக் கடல்கிளர்த் தென்னச் செல்லும் காவிரி என்னும் ஆற்றிள் வடகரை மண்ணி யின்பால் வந்தனன் கருணை வள்ளல். (வழிகடைப்.16.) கிளர்ந்தென்ன " [குடமுனி அகத்திய முனிவர். குண்டிகை கமண்டலம், பொங்கி எழுந்ததுபோல. படி பூமி] அப்போது தேவர்கள் முருகப் பெருமானை வந்து வணங்கி, எம்பெருமானே, இந்த நதிக்கரையில் சில காலம் தங்க வேண்டும். ஒரு புதிய நகரத்தை இங்கே உண்டாக்க வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்கள். உடனே விசுவகர்மாவை நினைத் தான் முருகன். தேவதச்சனாகிய விசுவகர்மா அங்கே வந்து ஒரு கோவிலையும், அதனைச் சுற்றி அழகிய நகரம் ஒன்றையும் அமைத்தான். அந்த ஊருக்குக் குமாரபுரி என்று பெயர். இன்று சேய்ஞலூர் என்ற பெயருடன் அது விளங்குகிறது. சேய் என்றால் முருகன். சேய் நல்லூர் சேய்ஞலூர் ஆயிற்று. அங்கேதான் சண்டேசுவர நாயனார் திரு அவதாரம் செய்தார். இப்படி விசுவகர்மா தன்னுடைய மனத்தினாலே எல்லாவற்றையும் பண்ணினான். என்ன லோடும்அவ் விடந்தனில் எங்கோன் துன்னு தொல்படை சுராதிய ரோடு மன்ன, அங்கணொரு மாதகர் நெஞ்சத்து உன்னி நல்கலும், உவந்தனர் யாரும். (குமரரபுரிப்.11) (படை - படை வீரர்கள். சுராதிபரோடு மன்ன - தேவர்களின் தலைவர்களோடு
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/226
Appearance