முருகன் செந்தூர் வருதல் 211 காட்சி. என்று பற்பல இடங்களில் உள்ளவற்றைச் சேகரித்துக் கொண்டு வந்து காட்டுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு கோவிலும் நிரந் தரமான காட்சிச் சாலைகளாக இருந்து வந்தன. இன்றும் அங்கே உள்ள சிற்பங்கள் சித்திரங்கள் ஆகியவற்றின் பெருமையைச் சொல்லவா வேண்டும்? சிறிய ஊர்களிலும் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் காலத்தில் மன்னனும், மற்றக் குடி மக்களும் கோவிலுக்குச் சென்று வழிபடுவதைக் கடமையாகக் கொண்டிருந் தார்கள். " பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்று ஒரு பாண்டியன். முதுகுடுமி என்றால் அவன் குடுமி பழையது என்பது பொருள் அல்ல. மதிலின் மேல் கலசம் போல அங்கங்கே வைக்கப்பட்டிருப்பதற்குக் குடுமி என்று பெயர். அவனது மதிலின் மேலுள்ள குடுமிகள் மிகப் பழமையானவை. அதாவது, எதிரிகள் யாரும் அந்நகரை முற்றுகை யிட்டு, அந்த மதில் குடுமிகளுக்குச் சேதம் விளைவிக்கவில்லை. ஆத லாலே அவை முதுகுடுமி. அவற்றினால் அவனது வீரம் புலனாகிறது. அவன் பல யாகங்களைச் செய்தவன். ஆதலால் பல்யாகசாலை என்ற பெயர் சேர்ந்தது. பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதி என்பது அவனுடைய முழுப் பெயர். 46 } ஒரு நாள் அவனுடைய அவைக்களப் புலவர்கள் அவன் முன் அமர்ந்து அவனுடைய புகழைப் பேசிக் கொண்டிருந்தார்கள், ஒவ் வொருவரும் ஒவ்வொரு வகையில் அவனது புகழைச் சொன்னார். ஒரு புலவர், உன்னுடைய குடை எங்கும் பரவட்டும் " என்று சொன்னார். அரசாட்சிக்கு அடையாளமாக இருப்பது குடை. 'மன்னனுடைய குடை நிழலில் தங்குகிறேன் ' என்று சொல்வது வழக்கம். "உன் குடை உலகம் முழுவதும் பரவி நிழற்ற வேண்டும்' என்று அந்தப் புலவர் பாடினார். மற்றொருவர், "உன் தலை வணங்காமல் இருக்கட்டும் " என்று பாடினார். பின்னும் ஒருவர், பகைவர்களைக் கண்டவுடன் உனக்குக் கோபம் வரும்போது, கண் சிவக்கிறது. அந்தச் சிவப்பு எங்களுக்குப் பாதுகாப்பு. அந்தச் சிவப்பு அழகாக நிலவட்டும்" என்று சொன்னார்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/231
Appearance