212 கந்தவேள் கதையமுதம் வேறொருவர், "உன் கண்ணி வாடாமல் சிறப்பாக விளங்க வேண்டும்" என்று பாடினார். அந்தச் சபையில் காரிகிழார் என்ற புலவரும் வீற்றிருந்தார். இளைஞர்கள் எல்லாம் இப்படிப் பாடின பிறகு, காரிகிழார் ஒன்றும் பாடவில்லையே என்று திரும்பிப் பார்த்தார்கள். அப்போது அந்தப் புலவர் பாடத் தொடங்கினார். £4 "இங்கே உள்ள யாவரும் அரசர் பெருமானை மிகச் சிறப்பாகச் சொன்னீர்கள். நான் ஒன்றும் சொல்லவில்லையே என்று இருக்கும். நானும் சொல்லப்போகிறேன். நான் சொல்வது உங்களுக்குச் சற்று வருத்தமாக இருக்கலாம். பொறுமையுடன் கேட்டால் என் கருத்து விளங்கும்" என்று பீடிகை போட்டுக்கொண்டு ஆரம்பித்தார். "புலவர்களே, மன்னர்பிரான் குடை எங்கும் விரியட்டும் என் சொன்னீர்கள். அந்தக் குடை மடங்கட்டும் என்று நான் சொல் கிறேன். எல்லோருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் இப்படிப் பேசுகிறார் என்று தோன்றியது. 41 று அடுத்து அவர் சொன்னார், "உன் கண்ணி வாடட்டும்" என்று. அவையில் இருந்த மற்றப் புலவர்களுடைய கலக்கம் அதிகமாயிற்று. அடுத்தபடி சொன்னார், "உன் தலை வணங்கட்டும்" என்று. கடைசியில், “உன் கண்களில் உள்ள கோபம் அவியட்டும்" என்றார். அதோடு நிறுத்தியிருந்தால் அவர் ஒரு பெரும்புலவர் ஆக முடியுமா? விடுகதைக்கு விடைகொடுப்பதுபோலத் தம் பாட்டை மேலும் சொன்னார். "உன்னுடைய குடை சிவபெருமானுடைய கோவிலை வலம் வரும்போது மடங்கட்டும்" என்றார். எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாயிற்று. "நான்கு வேதங்களையும் படித்துணர்ந்த அந்தணா ளர்கள் முன்பு உன் தலை வணங்கட்டும்' என்றார். போர்க் காலத்தில் பகை அரசர்களுடைய நாட்டைக் கொளுத்துவது வீரத்திற்கு அழகு என்று கருதினார்கள். "பகைவர்களுடைய நாட்டை நீ கொளுத்தும்போது அந்தப் புகையினால் உன்னுடைய கண்ணி வாடட்டும் " என்றார் புலவர். கடைசியில், "அந்தப்புரத்தில் பெருந்தேவி இருக்கும்போது ஊடலுடன் நின் கோபம்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/232
Appearance