முருகன் செந்தூர் வருதல் 213 அவியட்டும்" என்றார். இப்படி அறம் பொருள் இன்பம் வீடு காரிகிழார் சொல்லிவிட்டார். அந்தப் ஆகிய நான்கையும் பாட்டிலேதான், "பணியியர் அத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே" என்று சொல்கிறார். அதிலிருந்து மாபெரும் அரசர்களும் கூடத் திருக்கோவிலை வலம் வந்தார்கள் என்று தெரியவருகிறது. பிற்காலத்தில் அரசர்கள் எவ்வளவு பெரிய பெரிய கோவில்களைக் கட்டினார்கள் என்பதை நாம் அறிவோம். முருகப் பெருமான் பல தலங்களைத் தரிசனம் செய்துகொண்ட தோடு புதிதாக லிங்கப் பிரதிஷ்டை செய்தும் நமக்கு வழிகாட்டினான் என்று கொள்ளவேண்டும். முருகப் பெருமானின் அவதாரமான சம்பந்தப் பெருமான், தலங்கள் தோறும் சென்று தம் அற்புதப் பாடல்களினால் வழிபட்டார். அதனால் தலங்களுக்கு மகிமை மிகுதியாயிற்று. பாலை வருணனை காவியங்களைப் பாடும்போது ஐந்து திணைகளையும் பாடவேண்டு மென்பது ஒரு மரபு. கந்த புராணக்காரர் அந்த மரபைப் பின்பற்றி, இங்கே திணைகளைச் சொல்ல வந்தவர், முருகப் பெருமான் போகிற வழியில் பாலைநிலம் இருந்தது என்றும் சொல்கிறார். , அந்தப் பாலைவனத்தை விரிவாகச் சொல்கிறார். பாலைவனத் தின் அனல் சொல்லி முடியாது. சூரியனுடைய சாரதி அருணன். அவனுக்கு இரண்டு கால்களும் இல்லை; முடவன். சூரியனுடைய ரதத்திற்கு ஒரு சக்கரந்தான். இந்த இரண்டையும் எண்ணிக் கற்பனையாக ஒரு காரணம் சொல்கிறார் கச்சியப்பர். அந்தப் பாலை வனத்தின் மேலே தேரில் சென்ற போது அதன் வெம்மை தாங்காமல் தேரின் ஒரு சக்கரம் போய்விட்டதாம். அதே வெம்மையினால் தேர்ச் சாரதியின் இரண்டு கால்களும் போய்விட்டனவாம்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/233
Appearance