உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசுரர்களின் தோற்றம் 221 இதுவரைக்கும் பார்த்த உற்பத்தி காண்டத்தில், தேவர்கள் இறைவனை வணங்குவது முதலிய நல்ல காரியங்களைத் தெரிந்து கொண்டோம். இந்த அசுர காண்டத்தினால் அசுரர்கள் செய்த பொல்லாத காரியங்கள் எல்லாம் தெரியும். மனிதன் அகங்காரம் கொள்ளக் கூடாது; பிறருக்குத் துன்பம் தரக் கூடாது; அப்படித் தந்தால் அதற்கேற்ற தண்டனையை இறைவன் வழங்குவான் என்ற செய்திகளை அசுர காண்டத்தினால் தெரிந்துகொள்ளலாம். தர்மத்தை நேர்முகமாகத் தெரிந்து கொள்வது ஒருவகை. மறை முகமாகச் சொல்ல அறிவது ஒருவகை. தர்மநெறிப்படி வாழ்ந்தவர் கள் தமக்கும் மற்றவர்களுக்கும் நலம் செய்து தர்மத்தை நிலைநிறுத்தி இறைவன் அருளைப் பெற்றதாகக் புராணங்களில் வரும். அதர்மத்தைக் கடைப்பிடித்த அசுரர்கள் மக்களுக்குத் துன்பத்தை உண்டாக்கி, தாமும் துன்பப்பட்டுத் தர்மத்தை நிலைகுலைத்தார்கள். ஆண்டவன் அவர்களைத் தண்டித்துத் தர்மத்தை மறுபடியும் நிலை நாட்டினான். அதர்மம் நில்லாது, தர்மந்தான் வெல்லும் என்ற உண்மை நமக்கு அறிவுறுத்தப்படும். ஆக, அசுர காண்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, எதைச் செய்யக் கூடாது என்பதைத்தான். தேவர்கள் முப்பத்து மூன்று கோடிப் பேர்கள். அசுரர்கள் அறு பத்தாறு கோடிப் பேர்கள். எப்போதும் உலகத்தில் நன்மை குறை வாக இருக்கும்; பொல்லாதது இரண்டு பங்காக இருக்கும். இந்தக் காலத்தில் பலமடங்கு பொல்லாங்கு அதிகமாகி யிருக்கின்றது. மாமை1 தேவர்களுக்குத் தலைவன் இந்திரன். அவனைச் சுரேந்திரன் என்று சொல்வார்கள். அப்படியே அசுரர்களுக்கு எல்லாம் ஒரு தலைவன் உண்டு. அவனுக்கு அசுரேந்திரன் என்று பெயர். அவுணர்களுக்கு அரசனாகிய அகரேந்திரன் மங்கலகேசியை மணந்தான். அவள் சுரசை என்ற பெண்ணைப் பெற்றாள். அந்தப் பெண்ணுக்கு அசுரர் களுடைய குருவாகிய சுக்கிராசாரியார் மந்திரம், மாயம் முதலியவற் றைச் சொல்லிக் கொடுத்தார். சுக்கிராசாரியர் அடுத்துக் கெடுக்கும்