உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 உருவு கந்தவேள் கதையமுதம் அறிதி எப்பொருளும்; ஆவிகள் தோறும் செறிதி; எங்கள்துயர் சிந்துதல் முன்னிக் குறிய சேயுருவு கொண்டளை ; யார்க்கும் இறைவ, நின்செயலை யார்உணர் கிற்பார் ? . (திருச்செந்திப்.15.) (அறிதி - அறிவாய். செறிதி-தங்குவாய், முன்னி -திருவுள்ளம் கொண்டு. சேய் குமாரனுகிய வடிவத்தை.] "விபு ஆக இருக்கிற நீயே விசுவரூபம் கொள்ளத் தக்கவனாக வும் இருக்கிறாய். எங்களுக்கு உண்டான துயரைப் போக்கச் சின்னப் பாலனாக வந்திருக்கிறாயே தவிர, உன் செயலை யார் உணர் வார்கள்? உனக்குத் தெரியாதது என்ன? அசுரர்களின் தன்மைகள் எல்லாம் நீ அறிந்தவைதாமே? என்னைக் கேட்பதனால் என்னால் முடிந்தவரை சொல்கிறேன் " என்று குமாரநாயகனைப் பார்த்துப் பிருகஸ்பதி சொன்னார். " ஆகையால் அவுணர் தன்மைகள் எல்லாம் போகும் எல்லையுகல் கின்றனன் என்னா, வாகை சேர்குமர வள்ளலை நோக்கி ஓகை யோடரசன் ஓதிடு கின்றன். (போகும் எல்லை - இயன்ற வரையில். கை -மகிழ்ச்சி. அரசன் - பிருகஸ்பதி.) இங்கே 'அரசன் ஓதிடுகின்றான்' என்று பிருகஸ்பதியைக் குறிக்கிறார். வியாழ பகவானுக்கு ராஜா என்று பெயர். அரசன் என்று சொன்னார். அதனால் அவனை இது முதல் அசுரர்கள் வரலாற்றைச் சொல்கிறார். அசுர காண்டம் தொடங்குகிறது. தேவரும் அசுரரும் இதுவரை சொன்னவை யாவும் உற்பத்தி காண்டம். இனி மேல் வருவது அசுர காண்டம். எதைச் செய்ய வேண்டுமென்பதை இதுவரைக்கும் பார்த்தோம். எதைச் செய்யக்கூடாதென்பதை இனி நாம் புரிந்து கொள்ள வேண்டும். செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும் என்று கூறுவார் வள்ளுவர். அறநூல்கள், இன்னது செய்ய வேண்டும், இன்னது செய்யக் கூடாதென்று கூறும். வேதமே விதி களையும், விலக்குகளையும் சொல்லும்.