அசுரர்களின் தோற்றம் அஞ்ஞான சொரூபமாகிய அசுர மகள் 225 சுரசைக்குக் குருவாகச் சுக்கிராசாரியார் இருந்தார். எதற்கும் ஒரு குரு வேண்டும். கடவுள் இல்லையென்று சொல்பவர்களுக்குக் கூட அதைச் சொல்லிக் கொடுக்க ஒரு குரு வேண்டும். திருடப் போகிறவனுக்குக் கூடத் திருட்டைச் சொல்லிக் கொடுக்க ஒரு குரு இருக்க வேண்டும். வடமொழியில் சோர சாஸ்திரம் என்பதைக் கர்ணீசுதர் என்பவர் எழுதினாராம். குருவானவர் மாணவர்களுக்கு உபதேசம் செய்து விட்டு ஒரு தீட்சா நாமத்தையும் கொடுப்பார். சுரசையாகிய அசுரப் பெண்ணுக்கு உயதேசம் செய்த சுக்கிராசாரியார் அவளுக்கு மாயை என்ற தீட்சா நாமத்தையும் கொடுத்தார். மாயையும் காசியப முனிவரும் மாயை தன்னுடைய மாயா ஜாலத்தை யாரிடம் காட்டுவது என்று எண்ணிப் பார்த்தாள். சாமானிய மனிதர்களிடம் காட்டு வதில் பயன் இல்லை. மிகப் பெரியவர்களிடத்தில் காட்டவேண்டு மென்று நினைத்தாள். காசியப முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் போய் மாயை நின்றாள். இனிய பாட்டுப் பாடினாள். அவர் கண்ணைத் திறந்து பார்த்தார். கண்ணைக் கவரும் அழகான வடி வோடு மாயை நின்றாள். காசியபருக்கு மனம் கலங்கியது. யின் ஜால வேலை தொடங்கியது. ஞானம் முதிர்ந்து தவம் பண்ணினவருக்கே மனம் மாறிற்று என்றால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள்? மாயை ஆசை மாயை செய்த முதல் காரியம் இது. மாயை காசியபருடைய உள்ளத்தை இழுத்துத் தன் வசமாக்கிக்கொண்டாள். காட்டினாள். காசியபர் அவள் ஆசையால் மெலிந்து, அவள் கால் களில் விழுந்து கெஞ்சிப் புலம்புவதைப் பல பாடல்களில் சொல்கிறார் கச்சியப்ப சிவாசாரியார். சூரபன்மன் தோற்றம் காசியபருக்குத் தென்றல் காற்றுப் புவிபோலக் கொல்கிறதாம். நிலா எரிகிறதாம். இப்படி, காமம் மீதூர்ந்த காசியபரை மாயை முதல் சாமத்தில் கலந்தாள். ரிஷி கர்ப்பம் ஆகையாலே அவளுக்குச் 29
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/245
Appearance