உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கந்தவேள் கதையமுதம் சூரபன்மன் என்ற அசுரன் உடனே பிறந்தான். போதே இந்திராதி தேவர்கள் நடுங்கினார்கள். அவன் பிறந்த அந்த வேலையில் முகுந்தனும் அம்புயத் தவனும் இந்தி ராதியர் யாவரும் முனிவரர் எவரும் தந்தம் உள்ளமேல் நடுக்குற, மாயவள் தன்பால் வந்து தோன்றினன் சூரபன் மாஎனும் வலியோன். [அம்புயத்தவன் - பிரமன்.] (அசுரர் தோற்று. 17.) உலகத்தில் பூகம்பம் ஏற்படுகிறது. அது ஏற்படுவதற்கு முன்னாலே பூமிக்குள்ளே பல விதமான நிகழ்ச்சிகள் உண்டாகும். இனிமேல் இந்திராதி தேவர்களுக்குப் பெரிய கேடு வரப்போகிறது. அது சூரன் பிறந்தவுடன் அவர்களுக்குக் குறிப்பாகத் தெரிந்தது. அவர்களுடைய உடம்புகள் நடுங்கின. மாயை, காசியபர் ஆகிய வர்களுடைய உடம்பில் தோன்றிய வியர்வையிலிருந்து முப்பதாயிரம் வெள்ளம் அசுரர்கள் தோன்றினார்கள். அத்துடன் காம விளையாட்டு நிற்கவில்லை. இரண்டு பேரும் ஓடிப் பிடித்து விளையாடினார்கள். பல பல மண்டபங்களை உண்டாக்கி, அங்கங்கே கலந்து கலந்து அளவளாவினார்கள். சிங்கமுகன் பிறப்பு வேறோர் இடத்திற்குச் சென்று, மாயை பெண் சிங்க உருவத் தோடு இருந்தாள். காசியபரும் ஆண்சிங்க வடிவத்தை எடுத்தார். அப்போது இரண்டாம் சாமம். அந்த நேரம் அவர்கள் கலந்தபோது ஒரு குழந்தை பிறந்தது ; ஆயிரம் சிங்க முகங்களையும் இரண்டாயிரம் கைகளையும் உடைய ஓர் அசுரன் பிறந்தான். அவனுக்குச் சிங்க முகாசுரன் என்று பெயர். மங்கை யோடவன் மடங்கலாய் மகிழ்வுடன் புணரக் கங்குல் வாய்இரண் டாகிய யாமமேற் கடிதே அங்கை ஓரிரண் டாயிரம் ஆயிர முகமாய்ச் சிங்க மாமுகன் தோன்றினன், திடுக்கிடத் திசைகள், {அகரர் தோற்று.21.) [மடங்கள் - சிங்கம், கங்குல்வாய் - இரவில்.] திசைகள் நடுங்கும்படியாகச் சிங்கமுகாசுரன் பிறந்தானாம். முதலில் மாயை மானைப் போல வந்தாளாம். எல்லா விலங்கு களையும் விட மிகச் சாதுவாக இருப்பது மான். மானாக வந்தவள்