அசுரர்களின் தோற்றம் 227 அடுத்துச் சிங்கமாக மாறிவிட்டாள். எல்லா மிருகங்களும் கண்டு பயந்து நடுங்கக் கூடிய வலி படைத்தது சிங்கம். மானை நேர்பவள் ஆயிடைத் தொல்உரு மாற்றி மேன சூரரிப் பிணவுருக் கொள்ளலும், விரைவில் தானும் ஓர்திறல் மடங்கலே ரூம்எனச் சமைந்தான், மோன மாய்முனம் அருந்தவம் இயற்றிய முதல்வன். - [மேன வலிமையால் மேலான.ஞர் அரிப்பிண சிங்கம். மடங்கல் ஏறு -ஆண் சிங்கம்.] - (அசுரர்,20.) அச்சத்தைத் தரும் பெண் இவ்வாறு கச்சியப்பர் ஒரு நயத்தைக் காட்டுகிறார். முதலில் மானாகத் தோன்றியவள், செயல் செய்யும்போது சிங்கமாக ஆகிவிட்டாள். அன்பும் காதலும் நிரம்பிய மான் உருவத்தை மாற்றி, மற்ற மிருகங் களுக்கு எல்லாம் அச்சத்தைத் தரும் பெண் சிங்கத்தின் உருவத்தை எடுத்தாள். காசியப முனிவருடைய நிலை என்ன? மோனமாய் முனம் அருந்தவம் இயற்றிய முனிவன் அவர். அத்தகைய முனிவர் இப்போது தாமும் ஓர் ஆண்சிங்க வடிவை எடுத்துக்கொண்டார். மோன ஞானியாய் இருந்தவர், காமியான பிறகு கொடூரமான மிருகமாகவே ஆகிவிட்டாராம். ஏன் இப்படிக் காசியபரைச் சொல்ல வேண்டும்? தவம் செய் யாதவர்கள் கொடுமையானவர்களோடு சேர்ந்து கலந்து துன்பத்தை உண்டாக்குவது இயற்கை. ஆனால் அருமையான தவத்தைச் செய் தவர் இப்படிச் செய்தார் என்றால் அது மிகவும் இரங்குவதற்குரியது. . மானை நிகர் மாயையோடு சேர்ந்து சூரனை உண்டாக்கினாரே, அதோடு நின்றிருக்கக்கூடாதா? இரண்டாவது முறையும் அவள் பெண் சிங்கமாக மாறினவுடன், அது விலங்கு என்று அவர் ஒதுங்கி இருக்கலாம். காமத்தில் மீதுர்ந்து நின்றார் காசியபர். ஆகவே அவரும் ஆண்சிங்கமாக மாறி அவளுடன் கலந்தார். பொல்லாதவர்களோடு ஒருவன் சேர்ந்தால் நல்ல எண்ணங்கள் மாறி மிகப் பொல்லாதவனாகவே ஆகிவிடுவான் என்பதை இந்தக் கதை காட்டுகிறது. இரண்டாவது சாமத்தில் உலகம் எல்லாம் நடுங்கும்படியாகச் சிங்கமுகாசுரன் தோன்றினான். குழந்தை பிறந்தபோதே உலகம்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/247
Appearance