உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரபன்மன் ஆட்சி காசியபர் உபதேசம் சூரபன்மன், சிங்கமுகன், தாரகன் ஆகியோர்கள் தம் தந்தை யாகிய காசியப முனிவரின் காலில் வீழ்ந்து வணங்கினார்கள். அவர் நல்ல தவ முனிவர். ஆகையால் நல்ல வார்த்தைகள் சொன்னார். தான் கெட்டுப்போனாலும் மற்றவர்களுக்கு மல்லதைச் சொல்வது என்பது மனிதனுடைய இயற்கை. கள் குடிக்கிறவன் ஒருவன் தன் குழந்தையைப் பார்த்து, "நான் கள் குடித்துக் கெட்டுப் போய் விட்டேன். நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே" என்று சொல்வது வழக்கம். இங்கே காசியபர் தம்மை வணங்கிய குமாரர்களிடத்தில், "நீங்கள் தீமை செய்யாதீர்கள். பரமேசுவரனை நம்புங்கள். அவனை மார்க்கண்டேயர் கால நம்பினால் காலனையும் வெல்லலாம். சங்காரனான பரமேசுவரன் அருளால் பதினாறாயிரம் ஆண்டு வாழ்ந்தார்”என்று சொன்னார். இங்கே மார்க்கண்டேயர் கதை விரிவாக வருகிறது. ஆதலின் மைந்தர்காள், அறத்தை ஆற்றுதிர்; திதினை விலக்குதிர்; சிவனை உன்னியே மாதவம் புரிகுதிர்; மற்ற தன்றியே ஏதுள் தொருசெயல் இயற்றத் தக்கதே ? (காசிபன் உபதேசர். 24.) [அறந்தை ஆற்றுதிர் - தருமத்தைச் செய்யுங்கள். மற்று அது அன்றியே இயற்றத்தக்கது ஏதுவது ?] "நீங்கள் செய்யவேண்டிய காரியம் வேறு இல்லை. வாழ்க்கையில் பெரிய ஊதியம் எது தெரியுமா? இறைவன் திருவருள். அதை அடைவதற்கு அவனை நோக்கித் தவம் செய்யுங்கள்" என்று தம் மைந்தர்களுக்குக் காசியபர் நல்ல உபதேசம் செய்தார். மாயையின் கூற்று அப்போது அந்தக் குழந்தைகளின் தாயாகிய மாயை குறுக் கிட்டாள். நம்முடைய அனுபவத்தில்கூடப் பார்க்கிறோம். சில இடங்களில் தகப்பனார் தம் குழந்தைகளுக்கு நல்லுபதேசத்தைச் செய்கிறபோது, அவருடைய மனைவி வந்து தடுப்பாள். அதுபோலக்