உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரபன்மன் ஆட்சி 233 காகியயர் தம் குழந்தைகளுக்கு நல்ல உபதேசங்கள் செய்வதைக் கேட்டு மாயை வந்து சொன்னாள்: "ஓய்! என்ன உபதேசம் பண்ணுகிறீர்? இப்போதெல்லாம் புதிய யுகம். கர்நாடக சமாசாரத்தைச் சொல்லாதீர்கள். எது இருந்தாலும் இல்லா விட்டாலும் பணத்திற்கு நிகர் எதுவும் கிடையாது. பணம், பதவி/ ஆகிய இரண்டுமே உயர்வை உண்டாக்கும்" என்று சொன்னாள். அந்தக் காலத்தில் மாயை சொன்ன உபதேசத்தைத்தான் இப்போது பல பேர் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். மாயை மேலும் சொன்னாள்; எவ்வளவு கல்வி, தவம் இருந் தாலும் பயன் இல்லை. பொருள், பதவி சேர்ந்தால்தான் பயன் 2.GRT®. ஆகையால் பணத்தையும், பதவியையும் கெட்டியாகப் ப பிடித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னாள்; "அதற்கு என்ன உபதேசம் வேண்டுமோ அதைப் பெறுங்கள் " என்றும் சொன்னாள், சுக்கிராசாரியார் உபதேசம் " உடனே தங்கள் குருவாகிய சுக்கிராசாரியாரிடம் தம் குழந்தைகளை அவள் அனுப்பினாள். அவர் அவர்களுக்கு ஏற்றபடி உபதேசம் பண்ணினார். 53 இந்த நாம் செய்கிற அவருடைய உபதேசம் பல வகையாக இருந்தது. உலகம் எல்லாம் மாயையால் உண்டாவது. புண்ணிய பாவங்கள் இந்த உடம்புக்கே உரியவை. நாமே கடவுள். நமக்குப் புண்ணிய பாவங்கள் இல்லை. பிள்ளைப்பூச்சி சேற்றில் புரண்டால் சேறு ஒட்டுமா? ஒட்டாது. புண்ணிய பாவம் என்பன் எல்லாம் பேதைமை ; உடம்போடு சார்ந்தவை. உடம்போடு வந்தது உடம்பு போனால் போய்விடும். அவரவர் விருப்பத்தின்படி எதுவும் சொன்னார். ஆகவே எல்லோரும் செய்யலாம்' என்று இப்படிச் சொல்வதற்கு ஒரு குரு இருக்கிறார் என்பதை நினைந்து பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். "நீங்கள் பெரு வீரர்கள் ஆக வேண்டும். உங்களுடைய பதவி எல்லோரையும் உங்களுக்குக் கீழ்ப்படியச் செய்யக்கூடியதாக இருக்கவேண்டும். அதற்கு வேண்டிய யாகம் பண்ணுங்கள். பரமேசுவரன் அருள் செய்வான் " என்றார் சுக்கிராசாரியார். 30