உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரபன்மன் ஆட்சி 235 இராவணன், சூரன் ஆகியவர்கள் மிகக் கடுமையாகத் தவம் செய்தார்கள்; தங்களைத் தாங்களே வருத்திக்கொண்டார்கள். அந்தத் தவத்தினால் மிக்க வலிமை பெற்றார்கள். ஆயிலும் தாம் பெற்ற பெரிய வலிமையினால் எல்லோரையும் அழிக்க ஆரம்பித் தார்கள். அது அல்ல தவத்தின் இலக்கணம். "உற்ற நோய் நோன்றல்" என்பதை அவர்கள் செய்தார்கள். அதற்கு அடுத்து, "உயிர்க்கு உறுகண் செய்யாமை" என்பதை அவர்கள் கடைப் பிடிக்கவில்லை. தவத்தின் பயன் அகிம்சை. எந்த உயிருக்கும் தீமை செய்யக் கூடாது. அசுரர்கள் செய்த தவம் நால்லாம் எல்லா உயிர்களுக்கும் தீங்கு செய்வதற்காகவே; எல்லாரினும் சிறந்த வலிமை பெற வேண்டும் என்பதற்குத்தான். தனக்குத் துன்பம் ஏற்பட்டபோதும் பிறருக்கு வருத்தம் தரக்கூடாது என்பதுதான் தவத்தினுடைய இலக்கணம் என்று பார்த்தோம். மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரகமே ஒரு தவந் தான். "பிறர் உனக்குத் துன்பம் செய்தாலும் அதை நீ பொறுத் துக்கொள். அவரை எதிர்த்து உன் விரலைக்கூட நீட்டாதே" என்று அவர் உபதேசம் செய்தார். இதைப்போன்ற தவம் வேறு எங்கும் காண முடியாது. பழைய காலத்தில் உற்ற நோய் நோன்று, உயிர்க்குறுகண் செய்யாது தவம் செய்த பல பெரியவர்கள் இருந் தார்கள். அவர்களை எல்லாம் விடப் பெரியவர் மகாத்மாகாந்தி என்று சொல்வேன். அதற்குக் காரணம் உண்டு. வியாசர் முதலிய பெருமக்கள் தவம் செய்தார்கள். அவர்களுக்குப் பல பேர் சிஷ்யர்கள் இருந்தார்கள். அதிகமாகப் போனால் நூறு சிஷ்யர்கள் இருந்திருக்கலாம். ஆனால் மகாத்மா காந்திக்கு ஆயிரக்கணக்கான பேர்கள் அடியவர்களானார்கள். அவர் காட்டிய சத்தியாக்கிரகத் தவத்தில் அவர்கள் சேர்ந்துகொண்டார்கள். இப்படிப் பெரும் கூட்டமாக, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களைச் சத்தி யாக்கிரகம் என்னும் தவத்தில் ஈடுபடுத்திய மகாத்மா உண்மையில் பெரிய முனிபுங்கவர் என்று சொல்ல வேண்டும். தவத்தைச் சொல்லும்பொழுது மகாத்மாவைப் பற்றிய எண்ணம் வந்தது. சூரன் செயல் சூரன் ஆகாயத்திலிருந்து தன் உடம்புத் தசைகளை எல்லாம் அரிந்து அக்கினியில் போட்டான். இப்படிப் போடப் போடத்