236 கந்தவேள் கதையமுதம் தனக்குப் பலம் வரும் என்று அவன் எதிர்பார்த்தான். இறைவனுடைய திருவருளை உண்மையாக அடைய வேண்டுமானால் இப்படிச் செய்தால் மாத்திரம் போதாது. உள்ளன்பு வேண்டும். திருமூலர் இதைச் சொல்கிறார். "என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் களவிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகங்குவழ வார்க்கன்றி என்போல் மணியினை எய்தவொண்ணுதே," இந்தப் பாட்டைக் காணும்போது சூரபன்மாவின் நினைவு நமக்கு வருகிறது. அவன் என்பையே விறகாய் அரிந்து அரிந்து போட்டான். ஆனால் உள்ளத்தில் அன்பு இல்லை. வான கத்திடை நிற்புறு சூரபன் மாவாம் தான வர்க்கிறை வாள்கொடே ஈர்த்துதன் மெய்யின் ஊன்அ னைத்தையும் அங்கிமேல் அவியென ஓச்சிச் சோனை ஒத்ததன் குருதியை இழுதெனச் சொரிந்தான். அகரர் யாகப்.86.} [தானவர்க்கு இறை - அசுரர் தலைவனுகிய சூரள். ஈர்ந்து-அறுத்து. ஓச்சி- பெய்து. இதென -செய்யாக.] குரன் தன்னுடைய தசையைச் சமித்தாகவும், இரத்தத்தை நெய்யாகவும் பெய்தான். இப்படி ஆயிர வருஷம் யாகம் பண்ணினான். அப்போதும் ஆண்டவன் வரவில்லை. யாக குண்டத்தின் நடுவில் ஒரு வச்சிரக் கம்பம் இருந்தது. வச்சிரம் எல்லாவற்றையும் அறுக்கக் கூடியது. 'இனி இந்த உடம் போடு இருக்கக்கூடாது' என்று எண்ணி, அந்த வச்சிரக் கம்பத்தின் பக்கத்தில் வந்து அதன் மேலிருந்து வீழ்ந்தான் சூரன்; அவன் உடம்பெல்லாம் பொடிப்பொடி யாகிவிட்டது. தம்பியர் செயல் கடிதின் உச்சிநின் றுருவியே வச்சீர கம்பத் தடித னிற்சென்று சூரயன் மாவெனும் அவுணன் படிவ முற்றும்நுண் துகளுற உளம்பதை பதைத்து முடிய, மற்றது கண்டனன் மடங்கல்மா முகத்தோன். (அசுரர் யாகப். 01.) (கடிதின் - விரைவில், துகள் உற-பொடியாக. மடங்கல் மா முகத்தோன் - சிங்க முகாகரன்.)
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/256
Appearance