உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 சூரபன்மன் திக்கு விஜயம் கந்தவேள் கதையமுதம் சூரபன்மன் அதற்குமேல் தன்னுடைய அதிகாரத்தினாலே ஆட்சியைச் செலுத்தத் தொடங்கினான். முதலில் திக்கு விஜயம் செய்யப் புறப்பட்டான். குபேரன் இருக்கும் மேற்குத் திசைக்குப் போனான். குபேரன் அவனைக் கண்டு அஞ்சி, “நான் எப்போதும் உன்னைத் தொழுது கொண்டிருக்கிறேன். நான் உன் அடிமை அல்லவா?" என்றான். இந்திரன் இருக்கும் கிழக்குப் பக்கம் போனான். அவன் சூரனைக் கண்டு பயந்து மேலே போய்விட்டான். சூரன் அந்த நகரத்தைத் தியிட்டு எரித்தான். பின்பு அக்கினி மூலைக்குப் போனான். அக்கினி நமக்குச் சக்தி இருக்கிறது என்று எண்ணி அவனோடு சண்டையிட்டான். அவனால் எதிர்த்து நிற்க முடியவில்லை; தோற்று ஓடினான். சூரன் அக்கினியை, "நீ எனக்கு ஏவல் செய்வாயாக!" என்று பணித்தான். அதற்கடுத்துத் தென் திசை நோக்கி எமனை நாடிச் சென்றான் சூரன். அதற்கு முன்பு அக்கினிபட்ட பாட்டை யமன் அறிந்தான். 'இவன் நமக்கே எமனாக வருகிறான்; இவனோடு நமக்கேன் சண்டை?” என்று அஞ்சி, சூரனுக்குப் பூர்ணகும்ப மரியாதை செய்து வணங்கினான். வருணன் இருக்கும் திசையை நாடிச் சென்றான் சூரன். வருணன் பயந்து கடலுக்குள் ஓடி ஒளிந்தான். வாயு திசையை எல்லாம் சூரபன்மன் கொளுத்தினான். பிறகு நாகலோகத்திற்குப் போய் ஒரு கலக்குக் கலக்கினான். அங்கேதான் அமுதம் இருக்கிறது. நஞ்சுக்குப் பக்கத்தில் அமுதத்தை வைத்திருக்கிறான் ஆண்டவன். இது உலக இயற்கை. பலாப்பழம் தின்றால் வரும் துன்பம் அதன் கொட்டையைத் தின்றால் நீங்கும். எங்கே மிகவும் குளிர்ந்த நீர் இருக்கிறதோ அங்கேதான் வெந்நீர் ஓடையை ஆண்டவன் வைத் திருக்கிறான். பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த திருமால் சூரனுடன் போர் செய்ய வந்தார். அப்போது அவர் வீசிய சக்கராயுதம் தாரகன் கழுத்தில் மாலையாக விழுந்தது, இரத்தின கண்டி போட்டது போல. அறுக்கும் சக்கராயுதமே மாலையாகிவிட்டால் தவத்தின் பயன்தான் என்னே!" என்று இங்கே கச்சியப்ப சிவாசாரியார் தவத்தின் மகிமையை வியக்கிறார்.