சூரபன்மன் ஆட்சி ஓரிமை ஒடுங்கும் முன்னர் உலகெலாம் தொலைக்கும் தன்மைப் போரயில் நேரி தானும் புராரிதன் வரத்தாற் சென்று தாரக அசுரள் கண்டந் தன்னைவந் தணுகிச் செம்பொன் ஆரம தாயிற் றம்மா! தவத்தினும் ஆக்கம் உண்டோ? 241 (திக்குவிசயப்.S.V.) புராரி - [போர்அயில் நேமி- போரில் பயன்படும் கூர்மையுடைய சக்கராயுதம். சிவபிரான். ஆரம்-மாலை.] கண்ட தம்முடைய சக்கராயுதத்திற்கு நேர்ந்த கதியைக் திருமால், 'இனி இவர்களோடு போர் செய்து பயனில்லை' என்று எண்ணினார். அவர்களைத் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தார். "பரமேசுவரன் கிருபையால் அல்லவா இவ்வளவு பலம் பெற்றுள்ளீர் கள்? உங்களை வெல்லும் ஆற்றல் யாருக்கு வரும் ? நீங்கள் எனக்குப் பந்துக்கள் அல்லவா?" என்று சொல்லி ஆசீர்வாதம் செய்து போய்விட்டார். பிறகு சொர்க்கலோகத்திற்குப் போனான். இந்திரனும் அவன் தேவியும் ஓடி மறைந்தார்கள். தேவர்கள் அனைவரும், 'பகவானே, நீங்களே கண்கண்ட தெய்வம் தெய்வம்' என்று கூறினார்கள். “நாம் இடுகின்ற உத்தரவுப்படி நீங்கள் நடக்கவேண்டும்" என்று பணித்து விட்டு, பிரமலோகத்திற்குப் போனான். திருமாலே சூரனுக்கு ஆசி கூறி நழுவியபோது பிரமன் என்ன செய்ய முடியும்? காத லால்மிகு காசிபன் மைந்தன் ஆத லால்அவு ணர்க்கிறை, நின்மூ தாதை யான்; சர தய்இது; நின்சீர் ஏதும் என்புகழ்; யான்பிறன் அன்றே. [முதாதை - பாட்டன். சரதம் - உறுதி.) (திக்குவிசயப்.128.) "குழந்தைகளே, நீங்கள் காசியபனுடைய பிள்ளைகள் அல்லவா? காசியபன் என்னுடைய குழந்தை. ஆகையால் நீங்கள் எல்லாம் எனக்குப் பேரன்மார்கள் ஆகிறீர்கள். நீங்கள் செளக்கியமாக வாழ வேண்டுமென்று நினைப்பேனே தவிர, வேறு இல்லை. பேரர்கள் 31
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/261
Appearance