அகத்தியர் அருஞ்செயல்கள் இந்திரன் சீகாழியில் இருத்தல் சூரபன்மன் ஒன்பது கோடி அசுரர்களை அழைத்து, "நீங்கள் இந்திரலோகம் சென்று, இந்திரனையும், அவன் மனைவியையும் பிடித்துக்கொண்டு வாருங்கள்” என்று அனுப்பினான். அசுரர்கள் வருவதைத் தேவர்கள் இந்திரலுக்கு உணர்த்தினார்கள். 'இனி இந்த இடத்தில் இருந்தால் ஆபத்து வரும்' என்று எண்ணிய இந்திரன் தன் மனைவியுடன் மாறுவேடம் பூண்டு, அங்கிருந்து புறப் பட்டுப் பூவுலகத்திற்கு வந்து சேர்ந்தான். சூரனுடைய அலுவலாளர் கள் இந்திர லோகத்தில் இந்திரனோ, மனைவியோ அவன் இல்லாததைக் கண்டார்கள். அப்போது இந்திரனுடைய மகனாகிய சயந்தன் வைகுண்டத்தில் தன் சிறிய தகப்பனாருடன் தங்கி யிருந் தான். திருமாலுக்கு உபேந்திரன் என்று பெயர். பூவுலகத்திற்கு வந்த இந்திரனும், இந்திராணியும் சீகாழியை அடைந்தார்கள். சயந்தன் வைகுண்டத்திலிருந்து அமராவதி வந்தடைந்தான். அங்கே தன் தாய் தந்தை இல்லாததை அறிந்து நல்லவர் வருந்தினான். அப்போது நாரத முனிவர் வந்தார். களுக்குக் கேடு வருவதும்,பொல்லாதவர்களுக்கு நன்மை வருவதும் எப்போதும் இயல்பு அல்ல. உங்களுக்கு நல்ல காலம் வரும் என்று அந்த முனிவர் சயந்தனைத் தேற்றிவிட்டுப் போனார். இந்திரன் அடைந்த சீகாழிதான் ஞானசம்பந்தப் பெருமான் திரு அவதாரம் செய்த தலம். இது பின்னால் நடந்த நிகழ்ச்சி. சீகாழிக்குப் பன்னிரண்டு பெயர்கள் உண்டு. י "பிரமபுரம் வேணுபுரம் புகலிபெரு வெங்குருநீர்ப் பொருவில்திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன் வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம் பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால்" என்று அந்தப் பன்னிரண்டு பெயர்களையும் சொல்வார்கள். அந்தத் தலத்தில் இந்திரன் இருக்கும்போது வேறு வேலை இல்லாமையால் இறைவனைப் பூஜை செய்துகொண்டு அமைதியாக
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/268
Appearance