உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் அருஞ்செயல்கள் இருக்கலாம் என்று அமைத்தான்: பல எண்ணினன். 249 அதற்காக நந்தவனத்தை மலர்ச் செடிகளை வளர்த்து அவற்றிலிருந்த பூக்களைக் கொய்து சிவ பெருமானுக்குப் பூஜை செய்தான். ஒருவனுக்குத் துன்பம் உண்டாகும்போதுதான் இறைவனை எண்ணுகின்ற கினைவு வரும். சம்பந்தர் இறைவனை, நோயுளார் வாயுளான்" என்று சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் வேலையில்லாமல் யாரும் இருக்கக்கூடா து. அப்படி வேறு வேலை இல்லை யென்றாலும் இறைவனை நினைத்துக் கொண்டு இருப்பார்கள். அதனால்தான் யாரும் சும்மர இருந் தேன் என்று சொல்கிற வழக்கம் இல்லை : 'சிவனே என்று இருந்தேன்; தெய்வமே என்று இருந்தேன்' என்று சொல்வார்கள். சும்மா இருக்கும்போதும் இறைவனுடைய சிந்தனையோடு இருக்க வேண்டும். காலக்ஷேபம் என்று சொல்வார்கள். அதற்குப் பொருள் பலருக்குத் தெரிவதில்லை. காலக்ஷேபம் என்றால் பொழுது போக்குவது என்று நினைக்கிறார்கள். காலத்தைப் போக்குவது காலக்ஷோபம் என்பது. காலத்தைச் சேமிப்பதுதான் காலக்ஷேபம். நாம் வாழ்நாளில் எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். உத்தி யோகம் பண்ணுகிறோம். சம்பளத்தைப் பெற்றுப் பெரும் பகுதி யைச் செலவழித்துவிடுகிறோம். கொஞ்சத்தைத்தான் மிச்சப்படுத்தி வைக்கிறோம். அதுதான் வருங்காலத்திற்கு நமக்குச் சேமிப்பாக இருக்கிறது. அதை எய்ப்பில் வைப்பு என்று சொல்வார்கள். அது போல, நாம் நம் காலத்தைப் பல வகையான செயல்களில் செலவழித்து விடுகிறோம். அப்படிச் செலவழிக்காமல் காலத்தைச் சேமிக்க வேண்டுமானால் இறைவனது வழிபாட்டில் கழிக்க வேண்டும்; அல்லது அவன் புகழைக் கேட்கவேண்டும். அதுதான் சேமிக்கப்படும் காலம்; காலக்ஷேபம் காலக்ஷேபம் என்றால் இறைவனைப் போற்றி அவன் புகழைக் கேட்கும் செயல். அது சேமிப்பு அதுதான் பிற்காலத்திற்குப் பயன்படும்; நமக்குத் துன்பம் வரும்போது நம்மைக் காப்பாற்றும். 44 காலம் உண்டாகவே காதல் செய்து உய்ம்மின் " என்று மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். 32