உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 கந்தவேள் கதையமுதம் இந்திரா, வருந்தாதே, பின்னால் ஒரு நதி வரும். அப்போது நந்தனவனத்தைப் பாதுகாக்கலாம்" என்று ஒரு குரல் கூறியது. இந்திரன் எங்கிருந்து நதி வரப்போகிறது என்று கவலையோடு இருந்தான். அப்போது நாரதர் அங்கே வந்தார். அவர் பொல்லாதவர் களிடம் சென்று கலகத்தை உண்டாக்குவார் ; நல்லவர்களிடம் சென்று நன்மையை உண்டாக்குவார். இந்திரன் அவரிடம் தன் குறை களை எடுத்துச் சொன்னான். விந்திய மலையின் தருக்கு இந்திரனிடம் நாரதர் வரும்போது விந்திய மலை குறுக்கே இருந்தது. அதைப் பார்த்து நாரதர் சொன்னார்;"விந்தியமே, மேரு மலை இருக்கிறதே, அதில் தேவர்கள் இருக்கிறார்கள். இறைவனும் எழுந்தருளியிருக்கிறான். பரமேசுவரன் திரிபுர சங்காரத்தின்போது மேரு மலையை வில்லாக வளைத்தான். அதனால் அது மிகவும் கர்வம் கொண்டு தலை நிமிர்த்து நிற்கிறது " என்று கூறினார். கொன்னே இமையோர் குடிகொண் டதனால் பொன்னேர் கொடுயர்த் துபொருந் துதலால் பன்னே மிகள்சூழ் வருபான் மையினால் தன்நேர் இலையென் றுதருக் கியதே. (விந்தகிரிப்..) [பொன் ஏர் கொடு - பொன்லின் அழகைக் கொண்டு. நேமிகள் - வட்டமாகிய சூரிய சந்திரர்கள். சூழ்வருவலம் செய்யும். நேர் - ஒப்பு.] இதைக் கேட்ட விந்திய மலை, "விநாயகர் தம் கொம்பால் மகா பாரதத்தை எழுதும் சமயத்தில் அதன் மேனி எல்லாம் வருந்தும்படி அவர் கீறினாரே, அப்படிக் காயப்படுத்தியும் கூட அதன் செருக்குத் தணியவில்லையா?" என்று பரிகாசம் செய்தது. அப்படிச் சொன்ன தோடு மட்டுமன்றி, மேருவைவிட உயரவேண்டுமென்ற நோக்கத் தோடு, அந்த மலை வளர்ந்தது. என்னா வடவெற் பைஇழித் துரையா, அந்நா கம்வியக் கும்அகத் தையினை நன்னா ரதநீக் குவன்நா டுசெனா முன்னாம் உருநீத் ததுமொய் வரையே. [என்று - (விந்தகிரிப்.28) என்று, வடவெற்பை - மேரு மலையை. ராகம் - மலை.)