உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் அருஞ்செயல்கள் 253 ஒரு மந்திரத்தை உச்சரித்து, மாயவித்தை போல விந்தம் மெல்ல மெல்ல வளர்ந்தது, பிரம்ம லோகம் வரைக்கும் வளர்ந்து வழியை அடைத்தது. அப்போது நவக்கிரகங்கள் தங்கள் வழியே போக முடியாமல் தடைப்பட்டன. ஏன் இப்படிப் போவதற்கு வழியில்லாமல் போயிற்று என்று தேவர்கள் எண்ணும்போது, விந்திய மலையினால் வந்த கலக்கம் என்று தெரிந்து கொண்டார்கள். தங்கள் இயல்பான வழியில் போகவேண்டியவர்கள் வழி அடைபட்டதனால் வருந்தி, என்ன செய் யலாம் என்று யோசனை பண்ணினார்கள். அகத்தியர் புறப்படல் எல்லோரும் சேர்ந்து அகத்தியரை எண்ணிப் பிரார்த்தனை பண்ணினார்கள். மல்லற் கிரிவிண் நெறிமாற்றலின் மற்றெ மக்கும் செல்லற் கரிதா யது;பாருடைத் தேய முற்றும் எல்லைப் பொழுது மயக்குற்ற ; இவற்றை நீக்க ஒல்லைக் குறியோய், வரல்வேண்டுமென் றுள்ன லுற்றார். (அகத்தியப்.8) மல்லல் கிரிவளத்தையுடைய விந்தியமலை எல்லைப் பொழுது மயக்குற்ற ஆளவாகிய பொழுதுகள் தெரியாமல் கலங்கின. ஒல்லை - விரைவில்.குறியோய் குறுமுனிவனே.] அவர்கள் தங்களுடைய உள்ளத்தால் அகத்தியரை நினைந்து தியானம் செய்தவுடன், அதனை அறிந்த அகத்தியர், தேவர்களுக்கு நலம் செய்ய வேண்டுமென்று எண்ணிச் சிவபெருமானைத் தியானித் தார். அப்போது சிவபெருமான் முன் தோன்றி என்ன வேண்டு மென்று கேட்டான். "விந்திய மலை மேருவை விட மிக உயர்ந்து தேவர்கள் செல்லும் வழியை அடைத்துவிட்டது. அதன் வலிமை யை அடக்கும்படியான வல்லமை எனக்கு வேண்டும் " என்று தமிழ் முனிவராகிய அகத்தியர் வேண்டினார். சிவபெருமான், "அப்படியே உனக்கு ஆற்றலைத் தந்தேன். நீ போய் விந்தியத்தை அடக்கி, பொதிய மலையில்போய் இருப்பாயாக" என்று அருள் செய்தான். அன்றியும் வேறு பல வகையான வரங் களை அவருக்குத் தந்ததோடு ஏழு புண்ணிய நதிகளில் ஒன்றான காவிரியை அவரிடம் கொடுத்தான். கங்கை, யமுனை, கோதாவரி,