உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 கந்தவேள் கதையமுதம் "அகத்திய முனிவர் கமண்டலத்தில் காவேரி இருக்கிறது. அந்தக் காவேரியை இங்கே பாயும்படியாகச் செய்தால் நான் நந்தன வனம் தழைக்கும். இங்குப் பூக்கும் பூக்களைக் கொய்து சிவனை வழிபட வேண்டும் என்பது என் அவா என்றான். 3 அள்ளவன் தனது மாட்டோர் அணிகமண் டலத்தி னூடே பொன்னிஎன் றுரைக்கும் தீர்த்தம் பொருந்தியே இருந்த தெந்தாய், நன்னதி யதனை நீபோய் ஞாலமேல் கவிழ்த்து விட்டால் இன்னதோர் வனத்தில் நண்ணும்; என்குறை தீரும் என்றான். (காவிரி நீங்கு.33.) [அன்னவள் என்றது அகத்தியரை. பொன்னி -காவிரி] கணபதி அங்கிருந்து புறப்பட்டுக் கொங்கு நாட்டில் அகத்தியர் இருந்த இடத்தை அடைந்து, அவர் கீழே வைத்திருந்த கமண்ட லத்தில் ஒரு காக்கையைப் போலப் போய் உட்கார்ந்தார். கண பதியே அப்படி வந்தார் என்பதை அறியாமல், ஏதோ காக்கை வந்துவிட்டது என்று அகத்தியர் எண்ணினார். அதை விரட்டக் கையை ஓச்சினார். அப்போது விநாயகர் கமண்டலத்தைக் கீழே சாய்த்துவிட்டு, காவேரியைப் பார்த்து, அகத்தியர் நீ போ என்று கையைக் காட்டிவிட்டார். இனிமேல் நீ பூமியில் பாய் வாயாக" என்று சொன்னார். கமண்டலத்தைக் கவிழ்த்ததால் காவேரி எங்கும் இந்த வரலாற்றைப் காகம் பரவியது என்ற மணிமேகலை கூறுகிறது. பழைய நூலாகிய அமர முனிவன் அகத்தியன் தனாது கரகம் தமிழ்த்த காவிரிப் பாவை " என்று வருகிறது. கணபதியைப் பற்றிய செய்தி பழைய சங்க நூல் களில் இல்லை. சங்ககால நூல்கள் எல்லாமே கிடைக்கவில்லை. இப்போது கணபதியைப் பற்றிச் சொல்கிற நூல்கள் எல்லா வற்றுக்கும் மிகப் பழையது மணிமேகலை. அதில் கணபதி வந்து கவிழ்த்தார் என்று சொல்லாவிட்டாலும், அகத்தியருடைய கமண்