உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் அருஞ்செயல்கள் 261 டலம் கவிழ்ந்ததால் காவேரி பரவியது என்ற கதை, வேறு எந்தத் தெய்வத்தையும் சார்த்திச் சொல்லப்படவில்லை. மணிமேகலையின் காலத்திலேயே விநாயகப்பெருமான் அகத்தியருடைய கமண்டலத் தைக் கவிழ்த்தார் என்கிற வரலாறு நாட்டில் இருந்திருக்கிறது என்று இதனால் தெரிந்துகொள்ளலாம். காவேரி படர்ந்தவுடன் காக்கையாக வந்த விநாயகர் ஒரு சிறு பிள்ளையின் வடிவம் கொண்டார். அகத்தியர் அவரைத் துரத்திக்கொண்டு போனார். அருகில் போனவுடன் விநாயகர் தம் வடிவத்தைக் காட்டி கின்றார். உடனே அகத்தியர் தாமே தம் தலையில் குட்டிக்கொண்டு ஒரு வரம் வேண்டினார். "எம்பெருமானே, இப்போது நான் என்னுடைய தலையில் குட்டிக்கொண்டாற்போல இரு கைகளாலும் யாராவது குட்டிக்கொண்டு உன்னை வணங்கினால் அவர்கள் குறைகளைத் தீர்த்து அருள் செய்யவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். அப்படியே விநாயகர் அருளினார். இன்னே தமியேன் எனவே இனிநின் முன்னே நுதலில் முறையால் இருகை கொன்னே கொடுதாக் குநர்தம் குறைதீர்த் தன்னே எனவந் தருள்செய் எனவே. (காவிரி நீங்கு.58.) (இன்னே-இப்போது. தமியேன் எனவே - துணையில்லாத தனியேனாகிய என்னைப்போல. தாக்குநர் - குட்டிக்கொள்பவர். அள்ளே என அன்னையே போல.] பின்பு ஓடுகின்ற காவேரி ஆற்று நீரைக் கொஞ்சம் கமண்ட லத்தில் மொண்டுகொண்டு அங்கிருந்து அகத்தியர் தெற்கே வந்தார். அவ்வாறு வரும்போது சீகாழியில் இந்திரன் வைத்திருந்த நந்தன வனத்தைக் கண்டு களித்தார். காவேரி பாய்ந்து அந்த நந்தனவனம் மிகவும் செழித்திருந்தது. சிவப்பிரகாசர் பிரபுலிங்க லீலையில் இந்த வரலாற்றை விநாயகர் காப்பில் சொல்கிறார். சுரகு லாதிபன் தூமவர் நந்தனம் பெருக வார்கடல் பெய்த வயிற்றினோன் காக நீரைக் கவீழ்த்த மதகரி சரணம் நாளும் தலைக்கணி ஆக்குவாம்." (சுரகுலாதிபன் - இந்திரனுடையா வார்கடல் பெய்த வயிற்றினோன் கடை விழுங்கி வயிற்றி லிட்ட அகத்தியன், மதகரி - கரிமுகக் கடவுள்.]