உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 திருக்குற்றாலம் அடைதல் கந்தவேள் கதையமுதம் அகத்தியர் பிறகு திருக்குற்றாலம் வந்து சேர்ந்தார். அங்கே கோயில்கொண்டிருந்த நாராயண மூர்த்தியைப் பூஜை செய்யும் வைணவர்கள் இருந்தார்கள். அவர்கள் விஷ்ணுவிடத்தில் பக்தி பண்ணினதோடு சிவ விரோதிகளாக இருந்தார்கள். யாராவது விபூதி பூசி வந்தால் கோவிலுக்குள் விடுவதில்லை. ஒரு சமயத்தில் பற்று வைத்தவர்கள் அதில் ஆழமான அன்பு உடையவர்களாக இருப்பது தவறு அன்று. ஆனால் மற்றவர்களிடம் பகை காட்டக் கூடாது. சைவர்களிலும் கூடச் சிலர் விஷ்ணு விரோதியாக, வைணவர்களை வெறுக்கக்கூடியவர்களாக இருக்கி றார்கள். நம்முடைய நாட்டில் உண்மையான சமய வாணர்கள் அப்படி இருக்கமாட்டார்கள். தங்கள் தங்கள் சமயத்தில் பற்றுக் கொண்டு, தங்களுடைய உபாசனா தெய்வங்களைப் பக்தியோடு வணங்குவார்கள்; மற்றத் தெய்வங்களை வெறுக்கமாட்டார்கள்; பிற சமயங்களைக் கண்டனம் செய்யமாட்டார்கள். திருக்குற்றாலத்தில் இருந்த வைணவர்களோ சைவ விரோதிக் ளாக இருந்தார்கள். அவர்களுடைய கர்வத்தைப் போக்கவேண்டு மென்று அகத்திய முனிவர் நினைத்தார். அப்பதியில் அச்சுதனுக் காலயமொள் றுளதம்மா; அவனி மீதில் ஒப்பிலதோர் திருமுற்றம் அஃதென்பர் இம்பரெலாம் ; உம்பர் தாமும் செய்புவர்;ஆ யிடை, தன்னில் அந்தணர்கள் அளப்பில்லோர் செறிவர் ; அன்னார் மெய்ப்படுநூால் முறைகண்டும் மோசுத்தால் தமதுமதம் மேற்கொண் டுள்ளார். திருக்குற்றாவம். 2. நூல்முறை (திருமுற்றம் - திருமால் கோயில், இம்பர் - இவ்வுலகில் உள்ளார். கண்டும் - வேதத்திலுள்ள முறையை அறிந்தும்.] அகத்தியர் அங்கே போகும்போது நெற்றி நிறைய விபூதியும் கழுத்தில் ருத்திராட்ச கண்டிகையும் அணிந்து சென்றார். அங்கிருந் வைணவர்கள் அவரைக் கண்டவுன் புலியைக் கண்ட மான்போ அஞ்சினார்கள்.