26,4 கந்தவேள் கதையமுதம் நூலையோ,கம்பியையோ கோத்து அணிய வேண்டும். இயற்கையாக நடுவில் துவாரம் உள்ளது ருத்திராட்சந்தான். நூலையோ, கம்பியையோ கோத்து அதை அணிய வேண்டுமென்றே ஆண்டவன் அதை இயற்கையாகவே துவார முள்ளதாகப் படைத்திருக்கிறான் என்று அவர்கள் சொல்வார்கள். சங்க காலத்தில் இவை எல்லாம் இல்லையென்று சிலர் சொல் கிறார்கள். கிடைத்துள்ள பாடல்களில் அந்தச் செய்திகள் இல்லா மல் இருக்கலாம். பாட்டை எழுதிய புலவர்களின் பெயர்கள் இருக் அந்தப் பெயர்களின் மூலமாகவும் சில செய்திகள் கின்றன. கிடைக்கின்றன. குமரன் என்ற சொல் முருகனுக்கு உரியது. திருமுருகாற்றுப் படை முதலிய நூல்களில் அந்தப் பெயர் வருவதில்லை. ஆனால் ஒரு புலவரின் பெயர் மதுரைக் குமரன் என்று இருக்கிறது. ஆகவே குமரன் என்று சொல்கிற வழக்குச் சங்ககாலத்திலேயே இருந்தது என்று அறியலாம். வெண்பூதியார் என்று ஒரு புலவர் இருந்தார். வெண்பூதி என்பது திருகீற்றைக் குறிக்கிறது திருநீற்றைத் தெரிந்துகொள்ளாமல் அந்தப் பெயர் வரக் காரணம் இல்லை. உருத்திரங்கண்ணனார் என்று ஒரு புலவருக்குப் பெயர். பலர் உருத்திரனுடைய பிள்ளையாகிய கண்ணனார் என்று அதற்குப் பொருள் கொள்வர். உருத்திரனுடைய கண்ணை அணிந்தவர், ருத்திராட்சத்தை அணிந்தவர் என்று அதற்குப் பொருள் சொல்ல லாம். திருநீறு, உருத்திராட்சம் ஆகியவை சங்ககாலத்திலேயே இருந்தன என்பதை வெண்பூதியார், உருத்திரங்கண்ணனார் என்ற நாமங்கள் தெளிவாக்குகின்றன. ருத்திராட்சத்தை உரைத்தால் பொன்போலத் தோன்றும். அது கபத்தைப் போக்கும் தன்மையுடையது. கழுத்தில் கட்டிக் கொண்டால் கபத்தால் வருகிற துன்பம் போய்விடும். நம்முடைய நாட்டில் எத்தனையோ அருமையான பழக்கங்களை வைத்திருக்கிறார்கள். சிவபெருமான் தீயைப் போன்ற வடிவினன். அவனுக்குக் குளிர்ச்சியான வில்வத்தால் அருச்சனை செய்கிறார்கள். தீக்கு மாற்றுக் குளிர்ச்சி. நாராயணமூர்த்தி எப்போதும் பாற் கடலில் இருக்கிறார். அவர் குளிர்ச்சிமயமானவர். அந்தப்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/284
Appearance