அகத்தியர் அருஞ்செயல்கன் 265 பெருமானுக்குச் சூடான துளசியினால் அருச்சனை செய்கிறார்கள். துளசி சூடானது; மலேரியா ஜுரத்தைப் போக்குவது. நாராயணர் என்பதற்குத் தண்ணீரோடு தொடர்புடையவர் என்று ஒரு பொருள் கொள்வார்கள். தக்கயாகப் பரணியில் சிவபெரு மானை, "அனலன்" என்றும், திருமாலை, "புனலன்" என்றும் சொல்லி யிருக்கிறார் ஒட்டக்கூத்தர். அனலனுக்குச் குளிர்ச்சியான வில்வமும், புலைனுக்குச் சூடான துளசியும் அருச்சனைக்குரியவை யாக உள்ளன. அகத்தியர் திருமாலைச் சிவபிரானாக மாற்றுதல் அகத்தியர் அணிந்திருந்த மங்கல வடிவமாகிய திருநீற்றையும், ருத்திராட்சத்தையும் கண்டு வெறுத்தார்கள், திருக்குற்றாலத்தில் இருந்த திருமால் அடியார்கள் ; "கொட்டையையும்,சாம்பலையும் அணிந்து வந்தாயே !" என்று பரிகாசம் பண்ணினார்கள். அகத்தியர் உடனே, "நான் போய்வருகிறேன்" என்று சொல்லி வெளியே வந்து விட்டார். போனவர் திரும்பப் பன்னிரண்டு திருமண் அணிந்துகொண்டு திருமால் அடியாரைப்போல வந்தார். முன்னே போனவரே திரும்ப வந்திருக்கிறார் என்பதை அங்கிருந்தவர்கள் அறிந்துகொள்ளாமல் மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்கள். அவருக்கு எதிரே சென்று உபசாரம் செய்து, காலில் வீழ்ந்து பணிந்தார்கள். "எல்லாம் நாராயணனுக்கே ஆகட்டும்" என்று அகத்தியர் ஆசி கூறினார். ஆளுடைய நாயகன்பால் அன்புடையாள் மாயவன்றன் னேபோல் அடி கோளுடைய மாயத்தால் மேனிகொண்டு மீண்டுமங்கண் குறுக லோடும் தீனிடையில் வரக்கண் - பெயிணவர்கள் எதிர்சென்று நெடிது போற்றித் தாளிடையின் வீழ்ந்திடலும் நாரணனுக் காகஎனச் சாற்றி நின்றன். . [ஆளுடைய நாயகன் - சிவபெருமான். தோளுடைய மாயத்தாம் - மேற்கொள்க தலையுடைய மாயத்தினால். அங்கண் - அங்கே. குலோடும் - அடைக்கிவுடன். நீஸ்டையில் - நெடுந்தூரத்தில்.] 34
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/285
Appearance