உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 கந்தவேள் கதையமுதம் முத்திநாதனை, "இப்போது சந்தர்ப்பம் சரியன்று; சிறிது நிற்க' என்று சொன்னான். அடியாரைத் தடுக்க வேண்டுமென்பது அவன் நோக்கம் அல்ல. உள்ளே சென்றால் அடியாருக்கு மரியாதை செய்கின்ற நிலைமையில் மன்னர் இருக்கமாட்டாரே என்று அவன் நினைத்தான். தான் சொன்னதையும் கேட்காமல், அடியார் வேடத்தில் உள்ளே நுழைந்த முத்திநாதனின் செயலைக் கண்டு தத்தனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. எத்தனையோ அடியார்களை அவன் பார்த்திருக்கிறான். அடியார்களிடத்தில் அமைந்திருக்கும் பண்பாட்டை அவன் கண்டிருக்கிறான். ஆகவே இந்த ஆளிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்று தெரிந்து கொண்டான். உள்ளே நுழைந்த சிவனடியாரைக் கண்டு மெய்ப்பொருள் நாயனார் வணங்கினார். இங்கே எழுந்தருளப் பெற்றது என்ன காரணம் என்று கேட்டார். அப்போது அவன், உங்கள்ந யகனார் முன்னம் உசைத்தஆகமநூல் மண்மேல் எங்குமில் லாத தொன்று கொடுவந்தேன் இயம்ப என்றான். அப்படிச் சொல்லும்போதே அவனுடைய வாக்கில் அவன் உள்ளம் வெளிப்பட்டது. சிவனடியார் வேடத்தில் வந்தாலும் நான் அடியான் அல்ல என்ற எண்ணம் உள்ளே இருந்தது. ஆகவே, 'நம் நாயகனார் என்று சொல்லாமல் உங்கள் நாயகனார்' என்று சொல்கிறான். இப்படிப் பொல்லாதவர்கள் உள்ளத்திலுள்ள மாசு, என்னதான் வேடம் போட்டாலும் வெளிவந்துவிடும். மெய்ப்பொருள் நாயனார் அந்த ஆகமத்தைக் கேட்க வணங்கி னார். அப்போது தன் கையில் ஏட்டுச் சுவடிபோன்ற கட்டினூடே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மெய்ப்பொருள் நாயனாரைக் குத்திவிட்டான். அங்கே சேக்கிழார் மெய்ப்பொருள் நாயனாரை அவன் குத்திவிட்டான் என்று சொல்லவில்லை. தான்முன் நினைந்த அப் பரிசே செய்ய? என்று சொல்கிறார். முன்னாலே அவன் என்ன நினைத்தான் என்பதை அந்தப் புராணத்தில் அவர் சொல்லவில்லை. நல்லதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்; பொல்லாததை நாம் ஊகித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்குத் தனிப் பயிற்சி தேவையில்லை. அதைத் தம் வாயினால் சொல்லாமல் சொல்லிவிட்டார் சேக்கிழார்.