அசமுகியின் சோகமும் சூரன் செய்த தண்டமும் அப்படியே ஏனாதிநாயனார் புராணத்திலும், GE முன்னின்ற பாதகனும் தன்கருத்தே முற்றுவித்தான்" என்று சொல்கிறார். 273 சொல்லத் தகாதவைகளைச் சொல்வதற்குப் பெரியவர்கள் வாய் கூசும்; சொல்ல மாட்டார்கள். இராமாயணத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி வருகிறது. தசரதன் கைகேயிக்கு இரண்டு வரங்கள் கொடுத்தான். இராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும், பரதன் நாடாள வேண்டும் என்பன கைகேயி கேட்ட இரண்டு வரங்கள். பரதன் ஆள வேண்டும் என்பதற்குத் தசரதன் தடை சொல்லவில்லை. ஆனால் இராமனைக் காட்டுக்கு அனுப்ப அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. கைகேயியிடம் எத்தனையோ கெஞ்சினான். கடைசியில், "அரசையே நான் தந்து விடுகிறேன். ஆனால் இராமனை மாத்திரம் காட்டுக்கு அனுப்பும்படி சொல்லாதே" என்று இரந்தான். "மண்ணே கொள் நீ; மற்றதை ஒன்றும் மறஎன்றான்; நீ இந்த இராஜ்யத்தைப் பெற்றுக்கொள்" என்றான். பிறகு "இராமனைக் காட்டுக்கு அனுப்பச் சொல்லாதே" என்று சொல்ல வில்லை; மற்றதை ஒன்றும் மற" என்றான். இராமனையும் காட்டையும் தனது வார்த்தையில் இணைத்துச் சொல்லக்கூட அவன் அஞ்சினான். பெரியவர்கள் இயல்பு இத்தகையது. ஆகவே கற்புடைய மங்கையாகிய இந்திராணி அரக்கர்கள் தன்னைக் கெடுத்துவிட்டால் என்ன செய்வது என்று சொல்லவில்லை. என்கிறாள். அல்லாதன புரிவரானால் இந்திரன் தேற்றுதல் இந்திராணியின் வார்த்தையைக் கேட்ட இந்திரன், "இறைவனு டைய திருவருள் இருக்கும்போது நீ கவலைப்படுவானேன்? சிவபெருமானும் திருமாலும் சேர்ந்து உண்டாக்கிய மகாசாஸ்தா உனக்குப் பாதுகாப்பாக இருப்பான். நீ அஞ்ச வேண்டாம்" என்று சொன்னான். 35
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/293
Appearance