உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 கந்தவேள் கதையமுதம் செய்ய சடைமேல் சிறந்தமதிக் கோடுபுனை துய்யவனும் வேலை துயின்றோனும் சேர்ந்தளித்த ஐயன், எமக்கோர் அரணாகி யே இருக்க நையல் முறையாமோ? நங்காய் நவிலுதியால். (செய்ய-சிவப்பு நிறமுள்ள சந்திரன். வேலை - பாற்கடலில் அரண் - பாதுகாப்பு. நையல் 3 அயிராணி.19.) மதிக்கோடு சந்திரனுடைய கீற்று: பிறைச் ஐயன் -சாத்தன் என்னும் அரிகரபுத்திரன். வருந்துதல்.] மகாசாஸ்தா வருதல் இங்கே கந்த புராணத்தில் மகாசாஸ்தாவின் வரலாறு வருகிறது. மகாசாஸ்தாவை இந்திரன் அழைக்க, அந்தப் பெருமான் யானையின் மேலே தம் தேவிமார்கள் இருவரும் உடன் இருக்க எழுந்தருளி வந்தார். அவரை வணங்கினான் இந்திரன்; "இந்திராணியை உன்னிடம் அடைக்கலமாகத் தந்திருக்கிறேன். நீதான் அவளைக் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டான். இந்த நாட்டில் சிறிது காலமாக சாஸ்தாவின் வழிபாடு அதிகமாக இருக்கிறது. பழங்காலத்திலும் அவருடைய வழிபாடு ஓரளவு இருந்தது. ஐயனார் திருக்கோளில் ஒவ்வோர் ஊரிலும் உண்டு, ஊருக்குக் காவல் தெய்வமாக அவர் இருக்கிறார். இப்போது சபரிமலை மகாசாஸ்தாவை வழிபடுவதற்கு எல்லோரும் விரதம் கொண்டாடுகிறார்கள்; சபரிமலைக்கு யாத்திரை செல்கிறார்கள். காஞ்சியில் சாஸ்த காஞ்சிபுரத்தில் காமாட்சி கோவிலில் சாத்தனார் காவலாக இருக்கிறார். கரிகால் சோழன் வடக்கே படையெடுத்துச் சென்றான். வடநாட்டு மன்னரை வெற்றிகொள்ள வேண்டுமென்பது அவனுடைய ஆசை. அதற்காகக் காமாட்சி திருக்கோவிலுக்கு. வந்து மகாசாஸ்தாவை வணங்கி, அவர் கையில் செண்டைக் கொடுத்து வாங்கிக் கொண்டான். சாஸ்தாவின் செண்டு என்பது பூச்செண்டல்ல. குதிரையை அடிக்கின்ற சவுக்கு இருக்கிறதே, அதற்குச் செண்டு என்று பெயர். சுந்தரமூர்த்தி நாயனார், ஐயனார் இவர்களின் கையிலுள்ள ஆயுதத்தைச் செண்டு என்பர். அதற்குக்