284 கந்தவேள் கதையமுதம் போகலும் அதனை ஐயன் பொருதரில் தலைவன் பாரா ஏகுதி போலும் தில்என் றெய்தியே உடைவாள் வாங்கிச் சேகுறு மனத்தான் கூந்தல் செங்கையால் பற்றி ஈர்த்துத் தோகையைத் தொட்ட கையைத் துணிந்தளன் விண்ணோர் துள்ள. (மகாகாளர்.27.) [ஐயன் பொருநரில் - சாஸ்தாவினுடைய போர் வீரர்களில்,ஏகுதி -போகிறாய். சேகு - வைரம், குற்றம். ஈர்த்து - இழுத்து. தோகை - இந்திராணி. துணித்தனள் வெட்டினான்.] தேவர்கள் மகிழ்ச்சி அடையும்படி அந்தக் காரியத்தைச் செய்தான். சசி தேவியை விடுதலை செய்து, அவளை மிரட்டின அவுணப் பெண்ணைக் காலால் உதைத்து அப்பால் தள்ளினான். அசமுகியின் துணையாகிய துன்முகியின் கரத்தை வெட்டினான். அசமுகி தரையிலிருந்து எழுந்து, பலவாறு கூவினாள்; கதறினாள். துன்முகி அவரைக்கு ஆறுதல் சொல்லிச் சூரபன்மனிடம் போய் இவற்றைச் சொல்லலாம் என்று யோரனை கூறினாள். உடனே அசமுகி, இந்திராணியைப் பார்த்து, உங்களை எல்லாம் சிறைப்படுத்தாவிட்டால் நான் சூரபன்மனின் தங்கை அல்ல” என்று சொல்லிப் புறப்பட்டாள். இந்திரனும் இந்திராணியும் மேரு மலையை அடைதல் சில காலம் கைலாசத்தில் இருந்த இந்திரன், நாங்கள் பூவுலகத்திற்குச் சென்று, இறைவனுடைய திருவருளைப் பெறத் தவம் செய்கிறோம். நீ திருவருள் பாலிக்க வேண்டும்" என்று நந்தியம் பெருமானிடம் வேண்டிக் கொண்டான். கைம்மை யாம்பெயர் அணங்கினோர் பெருவகை கறுத்த செம்மை யார்கணத் தெம்பிரான் எமக்கருள் செய்வான்; பொய்ம்மை தீர்தவம் இயற்றிட நிலமிசைப் போதும் எம்மை ஆங்கருள் புரிந்தளை விடுத்தியென் றியம்ப. (இந்திரன் மீட்சிப்.6.) [அணங்கினோர்- தேவமகளிர். செம்மை ஆர் - நிறைவை உடைய கழுத்து. போதும் - போவோம். விடுததி - அனுப்புவாயாக.] இங்கே கச்சியப்பர் சிவபெருமானை, கம் கைம்மை யாம்பெயர் அணங்கினோர் பெறவகை கறுத்த செம்மை யார்களத் தெம்பிரான்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/304
Appearance