அசமுகியின் சோகமும் சூரன் செய்த தண்டமும் 46 285 என்று சொல்கிறார். எங்களுக்கு முன் ஒரு காலத்தில் அழிவு நேர இருந்தது.நாங்கள் ஆலகால விஷத்தினால் அழிந்து போயிருப் போம். அவ்வாறு அழிந்திருந்தால் எல்லாத் தேவமகளிர்களும் அமங்கலத்தை அடைந்திருப்பார்கள். அத்தகைய நிலையைத் தேவ மகளிர் அடையாமல் ஆலகால விஷத்தை உண்டு, நீல கண்டனாக அமர்ந்திருக்கிற பெருமான் இப்போது மீண்டும் எங்களுக்கு அருள் செய்வான். ஆகையால் அந்த அருளைப் பெறுவதற்கு நான் பூமிக்குச் சென்று தவத்தைச் செய்ய வேண்டும்" என்று இந்திரன் கேட்டான். கேட்டு, விடைபெற்றுக்கொண்டு தவம் செய்வதற்காகச் சீகாழி வந்தடைந்தான். அங்கே வந்த பிறகு அங்கு நடந்த நிகழ்ச்சி களை அறிந்தான் இனி இந்த இடத்தில் இருக்கக் கூடாது என்று கருதி நாயகியை அழைத்துக்கொண்டு மேரு மலைக்குப் போனான். அசமுகி சூரனிடம் செல்லுதல் அசமுகி கை வெட்டுப்பட்ட கோலத்தோடு சூரபன்மன் அரசாண்ட வீரமகேந்திரபுரத்தை அடைந்தாள். அசமுகி வீரமகேந்திரபுரத்திற்கும் சென்று கீழ்த்திசை வாயிலை அடைந்தாள். அவள் அங்கே நுழைந்தது மூதேனி உள்ளே நுழைந்ததைப் போல இருந்தது. அவள் உள்ளே நுழைந்தவுடன் சீதேவி மற்றொரு வாயில் வழியே வெளியேறிவிட்டாள். அசமுகி யைக் கண்ட அசுரர்கள் எல்லாம் தங்கள் திங்கள் மனத்தில் தோன்றியதைப் பேசினார்கள். அவள் சூரபன்மாவின் அவைக் களம் சென்று தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைந்து புலம்பத் தொடங்கினாள். பெண்கள் அழுதால் வீட்டில் மூதேவி வருவாள் என்று சொல் வது வழக்கம். ஆகையால் பெண்கள் மனம் நொந்து கண்ணீர் விடும்படி செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அசமுகி அழுதுகொண்டு போனாள். மூதேவி அழுதுகொண்டே உள்ளே புகுந்தாள். மறிமுகம் உடைய தீயான் மன்றினுக் கணிய ளாகிக் கிறிசெயும் அன்னை தன்னைக் கேளிரை மருகா னோரைத் திறனுடை முன்னை யோரைச் சிந்தையில் உன்னி ஆண்டைப் பொறிமகள் இரியல் போக தறியே கவம்ப லுற்றாள். (அசமுகி புலம்புறு.1.) (மதிமுகம் - ஆட்டின் முகம். மூன்று - அரசவை. கிறி - வஞ்சகம். கேளிரை - உற விளரை. மருகு ஆஹோரை - மருகராக உள்ளவர்களை. முன்னையோரை - அண்ணன் மாரை, பொறிமகள் - திருமகள். இரியல் போக -விட்டு நீங்க.]
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/305
Appearance