உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 கந்தவேள் கதையமுதம் அசமுகியின் புலம்பலைக் கேட்டுப் பயந்து திருமகள் அந்த இடத்தை விட்டு ஓடிப் போனாளாம். தகப்பனாருக்குப் பிள்ளைகனின்மேல் பிரியம் இருக்கும். தாயாருக்குப் பெண்களின்மேல் பிரியம் இருக்கும், இது உலக வழக்கம். இப்போது கூடப் பெண்களின்மேல் பிரியம் இருப்ப தனால் மாப்பிள்ளைக்கு அதிக மரியாதை காட்டுவது தாய்மார்கள் வழக்கமாக இருக்கிறது. இந்த இயல்பை எண்ணி அசமுகி புலம்பு கிறாள். "தாயே, நீதானே என்னிடம் இரக்கம் காட்டுவாய்? நான் கரத்தை இழந்து, மானத்தை இழந்து உயிரைத் தாங்கிக்கொண் டிருக்கிறேன் ” என்றான். தாதையா னவர்அளித்த மைந்தர்கணே விருப்புறுவர்; தாயார் பெற்ற மாதரார் பால்உவகை செய்திடுவர்; ஈதுலக வழக்கம் என்பார்; ஆதலால் என்துயரம் அகற்றவந்தாய் இலை;அந்தோ! ஆரும் இன்றி ஏதிலார் போல்தமியேன் கரம்இழந்தும் இவ்வூயிர்கொண் டிருப்ப தேயோ. [ஏதிலார் அயலார்.] இப்படி அழுதுகொண்டே சூரபன்மனின் அவைக்களத்தில் விழுந்து புரண்டாள். என்று பற்பல் உரைத்தனவ், ஆவலித் திரங்கிப் பின்தொ டர்ந்திடு துன்முகி தன்னொடும் பெயரா மன்றின் மேவரு சூரபன் மாவெனும் வலிடுயான் பொன்த டங்கழல் முன்னரே வீழ்ந்துபோய்ப் புரண்டாள். (குரன் கண்டஞ்செய். L.) (ஆளலித்து வாய்விட்டுக் கதறி, இரங்கி - அழுது. பெயரா - சென்று.) கந்த புராணத்தில் இருபது புலம்பல்கள் உள்ளன; மிக அருமையான பாடல்கள். ஞனுடைய கோபம் தங்கை அழுது அடித்துக்கொண்டு புலம்புவதை அசுரனாகிய சூரபன்மன் பார்த்தான்; "யார் இதைச் செய்தது?" என்று கேட்டான். "இந்திரனுடைய மனைவி இந்திராணி பூலோகத்தில்