உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசமுகியின் சோகமும் சூரன் செய்த தண்டமும் 287 தவம் செய்து கொண்டிருந்தாள். உன்பால் கொண்டுவர எண்ணி, அவளை எடுத்தேன். அப்போது யாரோ ஒரு தேவன் சினந்து வந்து, நான் இந்திராணியைத் தூக்கி வர முடியாதபடி, என்னை உதைத்து, என் கரத்தைத் துணித்து விட்டான்" என்று அசமுகி சொன்னாள். புரந்த ரன்புணர் பூலோமசை புவியில்ஓர் புறத்தில் இருந்து நோற்றலும் உன்றனக் கென்றுசென் றெடுத்தோம்; விரைந்து வத்தொரு விண்ணவன் எங்களை வெகுண்டு கரந்து ணித்துமற் றவனைமீட் டேகினன் கண்டாய். (புரந்தரன் - இந்திரன். புலோமசை - இந்திராணி. துணித்து - வெட்டி.] (சூரன் தண்டம். 4.} விண்ணவன் - தேவன். சூரனுக்கு இரண்டு வகையில் கோபம் வந்தது. நெடுங்காலமாக இந்திராணியை அடையவேண்டுமென்ற ஆசை அவன் உள்ளத்தில் இருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இப்போது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற கோபம் ஒரு பக்கம். தன் தங்கையின் கரத்தை ஒருவன் துணித்துவிட்டானே என்ற கோபம் மற்றொரு பக்கம். கோபம் மிக அதிகமாகப் பொங்கி யெழுந்தது. அவனது கோபக் குரலைக் கேட்டவுடன் முதலில் பூமி நடுங்கியது. பூமியில் உள்ள மக்கள் நடுங்கினார்கள். மற்றவர்களைவிடப் பூமியில் உள்ள மக்கள் பலவீனமானவர்கள்.ஆகவே முதலில் நடுங் கினார்கள். பின்பு தேவர்கள் நடுங்கினார்கள். உயிரினங்கள் மாத்திரமா நடுங்கின? உலகிலுள்ள ஜடப் பொருள்கள் எல்லாம் நடுங்கின. கடல்கள் நடுங்கின. சத்திய லோகம், வைகுந்தம் ஆகிய எல்லாமே அசுரேந்திரனாகிய சூரனது கோபத்தைக் கண்டு நடுங்கின. அங்கே யார்தான் நடுங்கவில்லை? அவன் மிகப் பெரிய அகரன். அவனிடத்தில் தோன்றிய சினம் மிகப் பெரியது. அதைக் கண்டு யார் நடுங்காமல் இருப்பார்கள்?' என்று பாடுகிறார் கச்சியப்ப சிவாசாரியார். பார்த டுங்கின: விண்ணெலாம் நடுங்கின ; பரவை நீர்நடுங்கின ; அயன்பதம் நடுங்கின ; நெடியோன் ஊர்நடுங்கிண ; அவுணரும் நடுங்கினர் ; உ. லசுத்து ஆர்நடுங்கிலர்? அவன்சினம் சிறியதோ அன்றே. (ஞரான் தண்டம். 10.) [பரவை - கடல், அயன்பதம் - பிரமலோகம், நெடியோன் - திருமால்.]