288 கந்தவேள் கதையமுதம் வீட்டிலுள்ள ஒருவள் கோபித்துக்கொண்டால் வெளியில் இருப்பவர்கள் பார்த்துப் பயப்படுவார்கள். அவனது கோபத்தைப் பார்த்துப் பழகிப் போன மனைவிக்கு அதைக் கண்டு கிறிதும் அச்சம் இராது. இது அவருக்கு வழக்கம் என்று எண்ணியிருப்பாள். அசுரர்கள் சூரனுடைய கோபத்தைப் பல முறை கண்டவர்கள். ஆகவே சூரனுடைய கோபம் அவர்களுக்கு நடுக்கத்தை உண்டாக் காமல் அல்லவா இருக்கவேண்டும்? ஆனால் இப்போது உண்டான கோபம் சாமானிய கோபமா? இயற்கையாக எழுந்த கோபத்தைவிட இது பன்மடங்கு கொடிய கோபம் அல்லவா? ஆகவே அவுணர்களே அஞ்சினார்களாம். அவுணரும் நடுங்கினர். நாம் இத்தனை பேர்கள் இருந்தும் என்ன பயன்? என்னுடைய தங்கையின் கை வெட்டுப்படும்படி ஆயிற்றே. என்னிடத்தில் அசுரர்களாகிய நீங்கள் எத்தனை பேர்கள் இருக்கிறீர்கள்? என்னுடைய புதல்வர்கள் இருக்கிறார்கள். எங்கும் நிகர் இல்லாத இந்திரஞாலம் என்னும் தேர் இருக்கிறது. சக்கராயுதம் கையில் இருக்கிறது. உலகமெல்லாம் கண்டு அஞ்சத்தக்க பேர் எனக்கு இருக்கிறது.நானும் இங்கேயே நிற்கின்றேன். யார் இருந்து என்ன பயன்? என் தங்கையின் கை துணிக்கப்பட்டுவிட்டதே!" என்று அவன் வருந்தினான்; கதறினான். தீர்இருந்தனிர்; புதல்வரும் இருந்தனர்; நிகரில் தேர் இருந்தது; நேமியும் இருந்தது; சிறிதென் பேர் இருந்தது; யானும்இங் கிருந்தனன்; பின்னை யார்இருந்தும்என்? இருந்துமா கின்றதென் அந்தோ! (சூரன் தண்டம்.18.) (நேமி -சக்கரம்.] இவளுடைய கையிலிருந்து ஓழுகிய இரத்தத் துளிகளினால் நம்முடைய புகழே அழிந்து போயிற்று" என்று வருந்தினான். பானுகோபன் புறப்பட்டுச் செல்லுதல் அப்போது அங்கே வந்த பானுகோபன், "நாங்கள் எல்லாம் இருக்கும்போது நீ ஏன் வருந்துகிறாய்?” என்று சூரனைப் பார்த்துக் கேட்டான். சூரனிடமிருந்து செய்தியை அறிந்துகொண்டவுடன்,
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/308
Appearance