உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசமுகியின் சோகமும் சூரன் செய்த தண்டமும் 289 " என்னுடைய அத்தையின் கையை வெட்டிய அந்த மனிதனையும், உனக்குக் காதல் உணர்ச்சியை உண்டாக்கிய இந்திராணியையும், அவளுடைய கணவன் இந்திரனையும், அங்கே இருக்கிற தேவர் களையும் பற்றிக்கொண்டு நான் வருகிறேன் பார்" என்று சொல்லி, சூரனையும் சிற்றப்பன்மார்களையும் வணங்கிப் புறப்பட்டான்; "இப் போதே போய் அவர்களை எல்லாம் இழுத்துப் பற்றிக்கொண்டு வருகிறேன்" என்று முழக்கரிட்டுச் சென்றான். பானுகோபன் புறப்பட்ட பிறகு பிரமன் பஞ்சாங்கம் சொல்லிக் கொண்டு வந்தான். அசமுகி, துன்முகி ஆகிய இரண்டு பேர்களின் கைகளையும் மீட்டு முன்போலவே உண்டாக்குமாறு பிரமனைப் பணித்தான் சூரன். அப்படியே பிரமன், கைகள் கூடுக என்று சொல்ல, அவர்களுடைய கைகள் பழையபடியே ஆயின. என்று தாள்இவை மொழிதலும் திசைமுகன் இசைத்து வன்தி றற்கரம் கூடுக மற்றிவர்க் கெனலும் ஒன்னெர் மாத்திரைப் பொழுதின்முன் அவைவளர்ந் துறலும் நன்று நன்றுதின் வல்லபம் என்றுதூர் நவின்றான். (ஞரன் தண்டம். 35.) [தான் - சூரன். திசைமுகன் - பிரமன்.] அதைக் கண்டு பிரமனைப் பார்த்து, "உன்னுடைய வல்லமை நல்லது" என்று பாராட்டினான் சூரபன்மன்; துன்முகியைப் பானு கோபனுடன் சென்று இந்திராணி இருந்த இடத்தைக் காட்டப் பணித்தான். நவக்கிரகங்கள் பட்ட பாடு பிறகு நவக்கிரகங்களை அழைத்தான்; "எல்லோரும் வானத்தில் இருக்கிறபோது, ஏன் என் தங்கையின் கையை வெட்டும்படியாக விட்டீர்கள்?" என்று கேட்டான்; "நீங்கள் அவனுக்குத் துணை யாகவே இருந்திருக்கிறீர்கள். இல்லையென்றால் அதைப் பார்த்துத் தடுக்காமல் விட்டிருப்பீர்களா?" என்றான். மறத்தி றத்தினால் எங்கைதன் கையைஓர் வலியோள் குறைத்த தற்குநீர் அகத்தரே ; அல்லது குறிக்கின் புறத்தர் அன்று; நம் ஆணையால் இத்தொழில் புரிவீர்; முறைத்தி றங்கொலோ நுங்களுக் கிதுவென மொழித்தான். (சூரன் தண்டம். 41.} [மறத்திறத்தினால் - அக்கிரமமாக. எங்கைதன் - என்தங்கையின். குறைத்து தற்கு - வெட்டியதற்கு. அகத்தர் - உட்பட்டவர்கள் ; துணையானவர்கள். குறிக்கின் - யோசித்தால். புறந்தர் அன்று அயலார் அல்ல.) 37