உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசமுகியின் சோகமும் சூரன் செய்த தண்டமும் 291 இருங்கள். இந்திரனுடன் சேரக்கூடாது" என்று புத்திமதி புகட்டி அவர்களை அனுப்பினான். அவர்களும் தாங்கள் அவன் சொற்புடி நடப்பதாக நயமொழி சொல்லிவிட்டுப் போனார்கள். பானுகோபனும் சயந்தனும் போர் செய்தல் பானுகோபன் துன்முகியோடு சீகாழிக்குப் போனான். அங்கே யாரையும் காணவில்லை. பிறகு அங்கிருந்து இந்திர லோகம் போனான். அங்கே இந்திரனையும் இந்திராணியையும் காணவில்லை. ஆனால் வைகுண்டத்திற்குச் சென்றிருந்த இந்திரனுடைய மகனாகிய சயந்தன் திரும்பி வந்து அங்கே தனியாக இருந்தான். பானு கோபன் இந்திர லோகத்திற்கு வருவதைத் தேவர்களால் அறிந்தான் சயந்தன். "என் தந்தையும் தாயும் போன இடம் தெரியவில்லை. நான் எங்கும் போகப் போவதில்லை. வெறும் புலம்பலினால் ஏதும் பயன் இல்லை. வருவது வந்தே தீரும்.இங்கேயே இருந்து பானு கோபனுடன் போர் செய்யப் போகிறேன். ஒன்று, இறக்க வேண்டும்; அல்லது, வென்று வாழவேண்டும்" என்று அவன் 411. சொன்னான். போவ தில்லை யாண்டும்;இனிப் புலம்பு மாறும் இல்லை; அதின் ஆவ தில்லை; வருவதெல்லாம் அடையும் அன்றி அகலுவதோ? ஈவ தில்லை அவர்க்குவெரிந் இறைஞ்சிப் புகழ்வ திலைஎதிர்ந்து சாவ தல்லால் உய்த்திடுதல் இரண்டே உறுதி தமியேற்கே. (அமரர் சிறை புகு.24.) [வெரிந் - முதுகு. வெரிந் சுவதில்லை - தோற்பதில்லை.] தேவர்கள் அவனுடைய விரதத்தைக் கேட்டுச் சற்றே நடுங்கி னார்கள். "நான் வீரத்துடன் அவர்களுடன் போர் செய்வதற்குப் போகிறேன். என்னிடத்தில் அன்பு உடையவர்களாக இருந்தால் வாருங்கள். அஞ்சுகிறவர்கள் என்னோடு வரவேண்டிய அவசியும் இல்லை. எல்லோரும் மனத்தில் அச்சம் கொண்டு என்னை விட்டுப் போனாலும் நான் சற்றேனும் தளர்ச்சியின்றி அவனை எதிர்த்தே போராடுவேன் "என்றான் சயந்தன்.