உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 கந்தவேள் கதையமுதம் தேவர்கள் உடன்வர, அவன் ஐராவதத்தின்மேல் ஏறிப் பானு கோபனை எதிர்த்தான். இரு சாராருக்கும் போர் நடந்தது. அமரர்கள் தோற்று ஓடினார்கள். சயந்தன் நேரே வந்து அம்புகளை வீசினான்; மாயத்தால் பல வடிவாய் நின்று போர் செய்தான்; ஐராவதத்தின் மீது இருந்து அவுணர் படைகளைக் கடலைக் கலக்கு வது போலக் கலக்கிக் கொண்டிருந்தான். அப்போது பானுகோபன் பஞ்சாட்சரத்தைச் செபீத்தான். பஞ்சாட்சரம் உயிர் காக்கும் சொத்து அல்லவா ? சுக்கிரன் அந்த மந்திரத்தை அவனுக்கு உபதேசம் செய்திருந்தான். அதைச் செபித் தவுடன் சயந்தன் செய்த மாயைகள் அகன்றன. அப்போது பானு கோபன் அவனைப் பார்த்து, இந்திரன் பிள்ளையே, வா. உன் மாயையும், வலிமையும் நான் இங்கே வருவதற்கு முன்னரே போய் விட்டதைப் பார்த்தாயே! சூரியனையே பிடித்துச் சிறையில் அடைத் தவன் ஆயிற்றே நான். அவனைப் போலவே உன்னையும் சிறையில் அடைப்பேன். உனக்குச் சக்தி இருந்தால் என்னோடு வந்து போர் செய்வாயாக" என்று அறை கூவினான். வருதி இந்திரன் மதலை,நின் மாயையும் வலியும் கருதி யான்வரு முன்னரே போயின கண்டாய்; பருதி போலவே நின்னையும் இருஞ்சிறைப் படுப்பன்; பொருதி வல்லையேல், என்றனன் சூர்தரு புதல்வன். . (வருகி-வா மதலை மகனே. வல்லையேல் - வலிமையுடையையானுாம்.] (அமரர் சிறை{கு.64.) பருதி- சூரியன். பொருதி - போர் செய். இருவருக்கும் கடுமையான போர் நடந்தது. அப்போது நீண்ட அம்புகளைப் பானுகோபன் விட, அவை இந்திரனுடைய மகனாகிய சயந்தன் மார்பில் போய்க் குத்தின. ஐராவதத்தின்மேல் அவன் உணர்ச்சியில்லாமல் விழுந்து விட்டான். ஐராவதம் சினந்து சூரன் மகனது தேரைத் தாக்கி அழித்தது ; அவனது மார்பில் தன் தந்தங்களால் குத்தியது. அப்போது அதன் தந்தங்கள் முறிந்தன. பானுகோபன் சினந்து அதன் தும்பிக்கையைப் பிடித்து இழுத்து அதன் கவுளில் அறைந்தான். அது மயங்கி விழுந்துவிட்டது. சயந்தன் சற்றே உணர்வு வரவே, பார்த்தான். முன்னே மிகழ்ந் ததைக் கவனித்தான். 'நாம் செய்த மாயை போய்விட்டது, உடன்