அசமுகியின் சோகமும் சூரன் செய்த தண்டமும் 293 இருந்த துணைவர்கள் ஓடிவிட்டார்கள். நாம் தனியாக இருக்கிறோம். தீயவர்கள் நம்மைச் சிறைப்பிடித்துப் போவார்கள். இந்த நகரம் அழியும். இப்படி எல்லாம் எண்ணி மனமே நீ வருந்தாதே. எல்லாம் விதி விட்ட வழிபோலத்தான் நடக்கும்' என்று எண்ணினான். மாயை போயது; தனித்தனம்; குறைந்தது வள்மை; தீயர் பற்றுவர் ; அழியும்இந் நகர்எனச் சிறிதும் நீ இரங்கலை : இனிமண மே,விதி நெறிகாண் ஆயின் இங்குஇவை, என்றனன் சயந்தனாம் அறிஞன். அமரர் நிறைபுகு.ர.) (தனித்தளம் - தனியாக இருக்கின்றோம். இரங்கலை - வருந்தாதே. ஆயின் - யோசித்துப் பார்த்தால்.] அமரர் சிறை புகுதல் அப்போது பானுகோபன் ஆணையினால் அசுரர்கள் சயந்தனைக் கட்டிச் சிறைப்பிடித்தார்கள். தேவர்களை எல்லாம் சிறைப்பிடித் தார்கள். தேவருலகத்திற்குத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். இங்கே கச்சியப்பர் ஒரு நீதி சொல்கிறார். 'அமராவதிப் பட்டணம் பிரளய காலத்தில் அன்றி மற்ற நாட்களில் அழிவுறாது. அது இப்போது புழுதிபட்டுப் போய்விட்டது. எல்லாச் செல்வங் களுக்கும் மேலான செல்வம் இந்திரனுடைய ஐசுவரியம். இந்திர போகம் என்று உதாரணத்திற்குச் சொல்வார்கள். அத்தகைய சிறந்த போகத்தை உடையவனாய் இருந்த இந்திரனே வறியனாகிப் போய்விட்டான். எல்லா வகையான சக்திகளையும் பெற்ற தேவர்கள் சிறையை அடைந்தார்கள். இவற்றை எல்லாம் பார்த்தால் செல் வத்தையும், போகத்தையும் நிலையென மதிக்கலாமா ?" என்கிறார் அவர். ஊழியின் அன்றி என்றும் ஒழிவருத் துறக்க மூதூர் பூழிய தான தன்றே! புரந்தரன் வறியன் போனான்; வீழுறு சிறையின் உற்றார் மிக்கவர் என்றால், யாரும் வாழிய செல்வந் தன்னை நிலைனை மதிக்க லாமோ ? (அமரர் சிறைபுகு.95.1 ஊழி - பிரளய காலம். துறக்க முதூர் - சொர்க்கம். பூ -புழுதிமிக்கவர் தேவர். வாரியம் : அசை.] பானுகோபன் சயந்தனைக் கட்டிக்கொண்டு சூரனை அடைந்து வணங்கிச் சொல்ல ஆரம்பித்தான். நான் இந்திராணியைக் காணவில்லை. இந்திரனையும் பார்க்க முடியவில்லை. அவர்களுடைய மகனாகிய சயந்தனைக் கொண்டு
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/313
Appearance