294 கந்தவேள் கதையமுதம் வந்தேன். தேவர்களைச் சிறைப்பிடித்து வந்திருக்கிறேன். தேவ லோகம் முழுவதற்கும் தீயிட்டு வந்தேன் எனத் தன்னுடைய வீரச்செயல்களை அவன் சொன்னான். அதைக் கேட்ட சூரபன்மன் தன் மகனைத் தழுவிக் கொண்டான். தேவர்களைக் கொண்டுபோய் அவர்களுடைய அங்கங்களை வெட்டும்படி சொன்னான். அசுரர்கள் தேவர்களுடைய அங்கங்களை வெட்டினார்கள். தேவர்கள் தவ பலம் உடையவர்கள் ஆகையால் வெட்ட வெட்ட அவர்களுடைய அங்கங்கள் மறுபடியும் வளர்ந்துகொண்டு வந்தன. அதைக் கண்டு கோபம் மிக்க சூரன், " இவர்களைக் கொண்டுபோய்க் கடுமையான சிறையில் அடையுங்கள்" என்று சொன்னான். ஏவலாளர்கள் தேவர்களையும், சயந்தனையும் பிடர்பிடித்து உந்திக் கொண்டு போனார்கள் சிறைக்கு. கண்டனன், முனித்தின் னோரைக் காலமொன் ரூனும் வீடா வண் தரு நிரயம் போலும் இருஞ்சிறை இடுதிர் என்றே திண்திறல் அகரர் கேட்பச் செப்பலும், சயந்தன் றன்னை அண்டரைப் பிடர்தொட்டுந்தி ஆங்ஙனம் கொண்டு போனார். (அமரர் சிறைபுரூ.104.) பிடர்தொட்டு [வீடா-அறியாத, நிராம் - தரகம். உந்தி - கழுத்தைப் பிடித்துத் தள்ளி ] அண்டரை -தேவரை. கழுத்தைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு போனார்களாம்; கல்தாக் கொடுத்துத் தள்ளினார்கள். தேவமாதர்களை அழைத்து அசுரப்பெண் களுக்கு ஏவல் செய்யும்படி கட்டளையிட்டான் சூரன். போர்க்களத்தில் மயங்கி விழுந்த ஐராவதம் திருவெண்காடு சென்று சிவபெருமானைப் பூஜை செய்துகொண்டிருந்தது. வாலிய ஒளிகெழு வனத்தில் ஏகியே மூலம தாகிய முக்கண் மூர்த்தியை மேலுள தாணுவின் மேவச் செய்துயின் சீலமோ டருச்சனை செய்து வைகிற்றே. (ஆமரர் சிறை.113,) [வாலிய ஒலி கெழுவளம் - வெண்மையான ஒளிநிறைந்த காடு; திருவெண்காடு. தாணுவில் - லிங்கத்தில். மேவுச்செய்து - ஆவாகனம் பண்ணி.] இதை றைவனைப் பூஜை செய்ததன் பயனாக ஐராவதம் இழந்த நான்கு கொம்புகளும் வளர்ந்தன.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/314
Appearance