உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாகுவின் வீரச் செயல்கள் இதுவரையில் அசுரகணங்களுடைய கதையைப் பார்த்தோம். இனிமேல் வருவது மகேந்திர காண்டம். சூரபன்மாவின் நகராகிய வீரமகேந்திரபுரத்தில் நடக்கிற நிகழ்ச்சிகளைச் சொல்கிற பகுதி இது. இராமாயணத்தில் சுந்தர காண்டம் எப்படியோ அப்படி உள்ளது இந்தக் காண்டம். சுந்தரகாண்டத்தில் அநுமனுடைய வீரச்செயல் களையும், பேராற்றலையும் பார்க்கலாம். சுந்தர காண்டத்திற்குத் தலைவன் அதுமன். மற்றக் காண்டங்களில் எல்லாம் இராமன் தலைவனாக வருகிறான். சுந்தர காண்டத்திற்கு அநுமன் தலைவன் என்று எப்படித் தெரிகிறது? அதிலுள்ள படலத் தலைப்புகளைப் பார்த்தாலே தெரியும். கடல் தாவு படலம் என்கிறபோது யார் என்று கேட்டால் அது தெளிவாகத் தெரியும். யார் கடலைத் தாவியவர் என்றால் அநுமன் என்று விடை வரும். அப்படியே ஊர் தேடு படலம், காட்சிப் படலம்,திருவடி தொழுத படவம் என்று வருகிற படலங்களுக்கு எல்லாம் யார் என்ற கேள்வியைப் போட்டால் எழுவாய் அநுமன் என்று விடை வரும். எனவே சுந்தர காண்டம் முழுவதும் அநுமனையே தலைவனாகக் கொண்டது என்பது வெளிப்படும். அதுபோல் மகேந்திர காண்டத்தில் வீரவாகுவின் செயல்கள் வருகின்றன. அந்தக் காண்டத்துக்குத் தலைவர் வீரவாகு தேவர் என்று சொல்லிவிடலாம். வீரவாகுவைத் தூதனுப்ப எண்ணுதல் சூரபன்மன் பல தேவர்களைச் சிறையில் அடைத்தமை அறிந்தான், திருச்செந்தூர்ப் பாசறையில் எழுந்தருளியிருந்த முருகன். அப்போது பிரமன் முதலியவர்கள் முருகப் பெருமானை அணுகி, உடனே சென்று சூரபன்மாவை அழித்துவிடவேண்டு மென்று வேண்டிக்கொண்டார்கள். அவர்களைப் பார்த்து முருகன் சொன்னான்; "பிரமன் முதலிய தேவர்களையும், முனிவர்களையும் போல அசுரர்கள் கூடச் சிவபெருமானுடைய பிள்ளைகளே. ஆகை யால் அவர்களைத் திடீரென்று அழிப்பது நியாயம் ஆகாது. யாரேனும் தூதுவனை அனுப்பித் தேவர்களைச் சிறையிலிருந்து விடச்