வீரவாகுவின் வீரச் செயல்கள் 297 சொல்வோம். அவன் தேவர்களைச் சிறை நீக்குவானானால் அவனை வாழும்படி வீட்டுவிடலாம். அவன் முடியாது என்றால் நாம் அங்கே போய் அவனைச் சங்காரம் செய்யலாம். இதுதான் தர்மம் " என்றான். பொல்லாத பிள்ளையைத் தண்டிப்பதற்குப் பெற்றோருக்கு உரிமை உண்டு. அரசன் பொல்லாதவர்களை அழிப்பதே நியாயம். கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்" (குறள்.) பயிர்களில் களை மண்டுகிறது. பயிர்கள் நன்றாகத் தழைக்க அந்தக் களைகளை எடுத்தெறிய வேண்டும். அப்படி, நல்லவர்களிடையே பொல்லாதவர்களை இருக்கவிடாமல் அழிப்பதே அரசனுக்குரிய தர்மம் ஆகும். போரில் பகைவனுக்குத் தூது அனுப்பி, தூது பயன் தராது போனபின்பே போர் செய்வது முறை. போரிலும் ஒரு தர்மம் உண்டு. பழைய தமிழ் நூல்களில் அறப்போர் என்று சொல்வார் கள், அறத்தாறு நுவலும் பூட்கை, மறம்" என்று புறநானூற்றில் வருகிறது. பகைவர்களுடைய ஊருக்குப் படை எடுத்துச் செல்வதற்கு முன்னால் அங்குள்ள பசுக்களையும், அந் தணர்கள், பெண்கள், நோயாளிகள் ஆகியோர்களையும் காப்பதற் காகத் தாம் படையெடுத்து வரப்போவதாக மன்னர் முரசறைவது வழக்கம். அதை அறியும் அறிவில்லாத பகமாடுகளை அங்கே போய் அடித்துக்கொண்டுவந்து தங்கள் ஊரில் வைத்துக் காப்பாற்றுவது வழக்கம். இவை எல்லாம் தர்மயுத்தத்தின்பாற் படும். முருகப் பெருமான் கோபத்தினாலே, உடனே சென்று சூரனை அழிக்க வேண்டுமென்று எண்ணவில்லை. முறைப்படி போரையாற்ற வேண்டுமென்ற எண்ணத்தால் யாரையாவது தூது அனுப்ப வேண்டு மென்று சொன்னான். அதைப் பிரமனும் திருமாலும் ஆமோதித் தார்கள். லுடைப் பெரும்போர் எந்தை ஆற்றுமுன் சூரன் முன்ஓர் மிடலுடைந் நூதன் றன்னை விடுத்தலே அறத்தா றென்றர். 103 38
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/317
Appearance