வீரவாகுவின் வீரச் செயல்கள் 299 அனுப்புகிறார். அது போல இந்திரன் வீரவாகு தேவரை அணுகி, "நீங்கள் தூதுபோய்ச் செய்திகளைச் சொல்வதற்கு முன்பு ஒரு காரி யம் செய்யவேண்டும்; என்னுடைய மைந்தன் சயந்தன் சிறையில் இருக்கிறான். அங்கே சென்று அவன் மலமா என்று அறிந்து வாருங்கள். அவனுக்குத் தேறுதல் கூறிவிட்டு வாருங்கள்" என்று சொன்னான். கூர்ந்திடு குலிசத் தண்ணல் குமரவேள் ஓற்றன் தன்பின் பேர்ந்தனன் சென்று, வீர, பெருந்திறற் சூரன் முதர் சார்ந்தனை சிறையில் வானோர் சயந்தனோ டிருந்தார் அங்கட் சேர்ந்தனை தேற்றிப் பின்உன் செயலினை முடித்தி என்றன். (வீரவாகு கந்தமாதனம்.14.) (கூர்ந்திடு - கூர்மையான. குலிசத்து அண்ணனல் வச்சிராயுதத்தையுடைய இந் திறன். சார்ந்தனை, சேர்ந்தனை - சரர்ந்து, சேர்ந்து; இவை முற்றுறச்சங்கள்.] தேவர்களுக்கு நன்மை கிடைக்கும்போது, அவர்களோடு சேர்ந்து கறைப்பட்டிருக்கும் தன் மகனையும் முருகப் பெருமான் காப்பாற்று வான் என்று இந்திரனுக்குத் தோன்றவில்லை என்பதல்ல.சயந்தனை மாத்திரம் காப்பாற்றாமல் முருகன் தனியே விட்டுவிடுவானா? என்றாலும் பிள்ளைப் பாசம் என்பது எல்லாவற்றையும்விட வலிமையுடையது. எவ்வளவு ஞானியாக இருப்பினும் அவர்களைப் பிள்ளைப் பாசம் விடுவதில்லை. "கடந்து ளோர்களும் கடப்பரோ முக்கள்மேற் காதல்" என்று நைடதத்தில் வருகிறது. ஆகவே, எவ்வளவு பெரியவராக இருந்தாலும்,அறிவு உடையவராக இருந்தாலும் தம் குழந்தைகளி டத்தில் பற்று, பாசம், இருக்கும்; இந்திரனிடத்தில் பிள்ளைப்பாசம் இருந்ததில் வியப்பென்ன? அவன் வீரவாகு தேவரிடம் தனியாகத் தன் மகனைப் பார்த்துத் தேறுதல் சொல்லி வரும்படி சொன்னான். வீரவாகு புறப்பட்டுச் செல்லுதல் வீரவாகு தேவர், முருகப் பெருமான் தம்மைத் தூதுவராக அனுப்பினானே என்கிற மகிழ்ச்சியோடு புறப்பட்டார். கந்தமாதன வெற்பின் மேலேறிப் பெரிய உருவத்தை எடுத்துக்கொண்டு நின்றார்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/319
Appearance