உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 கந்தவேள் கதையமுதம் திருமால், பிரமன் முதலிய தேவர்கள் எல்லாம் அந்த வடிவத்தைக் கண்டு வியந்தார்கள். அங்கிருந்தபடியே சூரனுடைய வீரமகேந்திர புரியைப் பார்த்தார் வீரவாகு தேவர். தம்முடைய கையை நீட்டி அங்கிருக்கிற அத்தனை பேர்களையும் பிசைந்து கொன்றுவிடலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. என்றாலும் அங்கே இருக்கிற சயந்தனும், பிற தேவர்களும் அழிந்து போவார்களே என்ற எண்ணம் வந்தவுடன் அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டார். அந்தப் பிரம்மாண்டமான வடிவு முழுவதையும் தேவர்களால் காண முடியவில்லை. வீரவாகு தேவமீன் ஒவ்வோர் உறுப்பைத்தான் கண்டார்கள். அந்த அந்த உறுப்பையே தொழுது, மலர் தூவி, எங்களுடைய துயரை எல்லாம் மகேந்திரபுரத்திற்குத் தூதுபோய் மாற்ற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார்கள். விண்ணுலாம் புரிசை வெஞ்சூர் வியகைர் அதனை நோக்கி உண்ணிலாம் வெகுளி கொண்டான்; ஓருகரம் அங்கண் ஒச்சி நண்ணலார் யாரும் துஞ்ச நாம்அறப் பிசைகோ என்னா எண்ணினான்; சிறையில் உற்றோர்க் கிரங்கி அவ் வெண்ணம் மீட்டான். (வீரவாகு கந்தமாதனம். 41.) [புரிசை மதில். இச்சி-நீட்டி.நண்ணலார் பகைவர். நாம் அற - அச்சம் நீங்க. பிசைகோ - பிசையட்டுமா.] "என்னைப்போல இங்கே தூது போவதற்கு யார் இருக்கிறார்கள்? என்னுடைய வீரத்தை அறிந்துதான் எம்பெருமான் அனுப்பினான் " என்ற அகந்தை சிறிதும் இல்லாமல் வீரவாகு தேவர் அந்தப் பணியை ஏற்றார்; எம்பெருமானை நினைத்துத் தொழுதார். எந்தக் காரியம் செய்தாலும் கடவுளை வணங்கிச் செய்வது இந்த நாட்டுப் பழக்கம். ஆகவே தம்மைத் தூதுவனாக அனுப்பிய எம்பெருமானை மனத்தில் தியானம் பண்ணினார்; தொழுதார். அவர் இனிமேல் போய் வீரச்செயல்களைச் செய்யவேண்டும்.எனவே, எம்பெருமானின் வீரம் அவருக்கு நினைவு வருகிறது. வீரத்திற்கு இருப்பிடம் தோள். ஆகவே முதலில் எம்பெருமானுடைய புன்னி ரண்டு தோள்களை நினைத்து வாழ்த்தினார்,