உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 கந்தவேள் கதையமுதம் ஆகவே இந்திரன் பூஜை பண்ணினான் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும் என்று நினைத்தார் துர்வாசர். அதனால் தான், "அவனுக்கு என்ன வந்தது?" என்று கேட்டார். ஒன்றும் இல்லை என்பதை அறிந்தவுடன் அவருக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. இந்திரன் பெருமை அது என்று எண்ணவில்லை. எம்பெருமாட்டி செய்த அற்புதம் அது என்று நினைத்தார். எப்போதும் போகத்திலேயே திளைத்திருக்கும் இந்திரன் உள்ளத் திலே நிஷ்காமிய பூஜை பண்ணவேண்டும் என்ற எண்ணத்தைத் தேவி உண்டாக்கினாளே என்று அவள் அருளை வியந்தார். அங்கிருந்து ஸ்ரீபுரத்திற்குச் சென்றார். அம்பிகையை வணங்கி, "கொஞ்சம் பணம் இருந்தாலும் கடவுளை மறக்கும் இந்தக் காலத்தில் எல்லாப் போகங்களையும் உடைய இந்திரன் நிஷ்காமியமாக உன்னைப் பூஜை செய்தானாமே! உன் திருவருள் இருந்தவாறு என்னே !" என்றார். அப்போது அம்பிகை, "என் பக்கத்தில் வந்து பார்" என்றாள். தேவி சிம்மாசனத்தில் வீற்றிருந்தாள். அவள் உடம்பெல்லாம் கொப்புளமாக இருந்தது. அதைப் பார்த்துத் திடுக்கிட்டார் துர்வாச முனிவர். "இது என்ன அலங்கோலம்? இது என்ன விளையாட்டு?" என்றார். "நேற்று இந்திரன் பூஜை பண்ணினதைப் பற்றிச் சொன்னாயே ! அவன் இமாசலத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்தான். மிக மிகக் குளிர்ச்சியான நீரால்தான் அபிஷேகம் பண்ணினான். ஆனால், 'இதைப் போல யார் பூஜை பண்ணுவார்கள்?" என்ற அகங்காரத்தினாலே அந்த நீர் வெதும்பியது. அதனால் இப்படி என் உடம்பெல்லாம் கொப்புளம் ஆகிவிட்டது" என்றாள். அதைக் கேட்ட துர்வாசர் துடிதுடித்துப் போனார்."இந்தக் கோலத் தைப் பார்த்துக் கொண்டா நான் நிற்பது ? தாயே, இதற்குப் பரிகாரம் இல்லையா?" என்றார். "பரிகாரம் இருக்கிறது; பூலோ கத்தில் இன்ன கோவிலில் ஒரு மருத்துவர் இருக்கிறார். அவரிடம் சென்று வா" என்றாள் அம்மை. உடனே துர்வாசர் வெகு வேகமாகப் பூலோகத்திற்குச் சென்றார். அம்பிகை குறிப்பிட்ட ஊரில் இருந்த கோவிலுக்குச் சென்றார். அங்கே எந்த வைத்தியரும் இல்லை. தர்மகர்த்தா