உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாகுவின் வீரச் செயல்கள் 307 இருந்தார். அர்ச்சகர் இருந்தார். அம்பிகையின் சந்நிதானத்தில் யாரோ ஒருவர் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். அங்கே எந்த வைத்தியரையும் காணாத துர்வரசர் உடனே ஸ்ரீபுரம் வந்தார். அம்பிகையின் சந்நிதானத்தை அடைந்த போது, அம்பிகை ஜல் ஜூல் என்று சதங்கை ஒலிக்கச் சந்தோஷமாக நடனமாடிக் கொண்டிருந்தாள். அம்பிகையின் திருமேனி தேசு விட்டு விளங்கியது. "தாயே, இது என்ன ஆச்சரியம்?" என்றார். " அங்கே நான் சொன்ன வைத்தியனைப் பார்க்கவில்லையா ? " என்று கேட்டாள் அம்பிகை, "அங்கே தர்மகர்த்தா இருந்தார். அர்ச்சகர் இருந்தார். யாரோ ஏழை உன் சந்நிதானத்தில் கண்ணில் நீர் வார உன்னைத் தியானித்துக் கொண்டிருந்தான். வேறு வைத்தியர் யாரையும் நான் அங்கே காணவில்லையே!" என்றார் துர்வாசர். "என்னுடைய சந்நிதானத்தில் என்னை நினைந்து கண்களில் நீர் வர ஒருவன் இருந்தான் என்று சொன்னாயே; அவன் தான் நான் சொன்ன வைத்தியன். அவன் கண்ணீரா விட்டான்? அந்தக் கண்ணீரால் எனக்கு அபிஷேகம் செய்தான், உடனே என் உடம்பிலுள்ள கொப்புளங்கள் போய்விட்டன" என்றாள் அம்பிகை. அதைக் கேட்ட துர்வாசரின் உள்ளம் குளிர்ந்தது. உண்மை அன்பினால் உள்ளம் உருகி, மனம் கசிந்து விடுகின்ற கண்ணீர் எம்பெருமாட்டியின் திருமஞ்சன நீராகி அவள் உடலையும், உள்ளத் தையும் குளிர்வித்ததே என்று நினைத்துப் போற்றினார். என்பாவும் ஆறுகடல் வழிருந்தும் என் அம்மை அன்பாளர் கண் அருவி ஆடுவது திருவுள்ளம்!" என்பது பாசவதைப் பரணி. இதுவரைக்கும் சொன்னவற்றால் அன்புக்கு அடையாளம் கண்ணீர் என்று தெரியும். இரு வகை அழுகை நாமும் கண்ணீர் விடுகிறோம். ஆனால் அன்பினால் அல்ல, உலகத்தில் எதையோ இழந்ததற்காக அழுகிறோம். இதுவும் அன்பர் அழுகையும் ஒன்றாகுமா?