உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 கந்தவேள் கதையமுதம் ஓர் ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார்; இரண்டு கோடிக்குச் சொந்தக்காரர். அவருக்கு இரண்டு பிள்ளைகள். இரண்டு பேருக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார். அந்தத் தெருவிலேயே வடகோடியில் ஒருவனுக்கு வீட்டைக் கட்டிக் கொடுத்தார்; தென் கோடியில் ஒருவனுக்கு வீட்டைக் கட்டிக் கொடுத்தார். இரண்டு புதல்வர்களையும் அவரவர்கள் வீட்டில் குடியேறச் செய்தார். ஒருநாள் இரண்டுகோடி வீட்டிலும் உள்ள பெண்மணிகள் இடுப்புவலி என்று அழுதார்கள். வடகோடி வீட்டிற்கு ஒரு ஒரு டாக்டர் வந்தார். தென்கோடி வீட்டாரும் ஒரு பெரிய டாக்டரை அழைத்து வந்திருந் தார்கள். தென்கோடி வீட்டில் அழுதுகொண்டிருந்த பெண்மணியின் ஓலம் குறைந்தது. ஆனால் அந்த வீட்டிற்குள்ளிருந்து குவா, குவா என்று மற்றோர் அழுகுரல் கேட்டது. வடகோடி வீட்டில் இருந்த பெண்மணி அழுதுகொண்டே இருந்தாள். காரணம் என்ன? இடுப்பு வலி கான்று இரண்டு பெண்மணிகளுமே அழுதார்கள்; என்றாலும் தென்கோடி வீட்டுக்காரிக்குப் பிரசவ வேதனை; இன்பமாக முடிகின்ற வேதனை (sweet agony). வடகோடி வீட்டுக் காரிக்கோ வாயு வலி. இரண்டு பேர்களும் அழுதது அழுகைதான் என்றாலும் இரண்டும் ஒன்றாகுமா? அதுபோல்தான் நாம் எல்லாம் எது எதற்கோ அழுகிறோம். இறைவனை நினைந்து உருகி இன்பக் கண்ணீர் விடும் அழுகையே சிறந்தது. "பெற்றவட்கே தெரியும் அந்த வருத்தம் ; முன்னை பெறாப்பேதை அறிவாளோ? பேரா னந்தம் உற்றவர்க்கே கண்ணீர்கம் பலைஉண் டாகும்; உறாதவரே கல்நெஞ்சம் உடைய ராவார்" என்று தாயுமானவர் பாடுகிறார். திருவாசகத்தில் ஒரு பாட்டு வருகிறது. "மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன்; உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே." இவற்றை எல்லாம் கச்சியப்பர் நன்கு அறிந்தவர். ஆகவே வீரவாகு தேவர் அன்பினால் உருகினார் என்பதை அவரிடத்தில்