வீரவாகுவின் வீரச் செயல்கள் உண்டான வைக்கிறார். மெய்ப்பாடுகளை 309 விரிவாகச் சொல்லித் தெரிய மீதுகொள் பொடிப்பு மூட மெய்ப்புலன் சிந்தை ஒன்ற ஓதுவ தவற என்பும் உருகிய செருக நாட்டம் கோதில்பே ரருளின் மூழ்கிக் குதூகலித் திடுத லோடும் மூதுல கனைத்தும் ஆளி முழுவதும் மகிழ்ந்த வன்றே. (வீரவாகு தேவர்.51. வீரவாகு தேவர் அன்பினாலே உருகியபோது உயிர்கள் மகிழ்ச்சி அடைந்தன. அதன்பிறகு அவர் பழைய வடிவத்தினைக் கொண்டார். அந்தப் பக்தி நிலையில் என்பும் உருகிற்று என்கிறார். எலும்பு உருகுவதாவது என்ன? எலும்புருக்கி நோய் வந்ததா? நம் உடம்பில் மிக்க வலிமை உடையதாக இருப்பது எலும்பு, அன் பினால் உள்ளம் குழைகிறபோது எலும்புகள் மென்மை அடைந்து குழைவதுபோல இருக்கும். மாணிக்கவாசகர் பல இடங்களில் எலும்பை உருக்கினான் ஆண்டவன் என்று சொல்வார்; இரும்புதரும் மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கி என்று பாடுவார். வீரசிங்கன் வதை வீரவாகு தேவர் கடலைத் தாவி யாளிமுகன் வாழும் இலங் கைக்கு அருகே சென்றார். அவர் அங்கே போனபோது யாளிமுகன் சூரபன்மாவைக் காணப் போயிருந்தான். அவன் பிள்ளை அதிவீரன் அங்கே இருந்தான். அன்னதோர் வேலை முள்ளம் அகன்தலை யாளிப் பேரோன் துன்னுபல் அனிகத் தோடும் சூரனைக் காண்பான் ஏசு, மன்அதி வீரன் என்னும் மதலைஆ யிரமாம் வெள்ளந் தன்னொடும் இலங்கை வைகித் தணப்பறப் போற்றி உற்றன். (வீரசிங்கன் வதைப். 1.) [வோலை முன்னம் - காலத்துக்கு முன்னே. அவிகம் - சேனை. மதலை - புதல்வன். தணப்பு அற - நீங்குதலின்றி. போற்றி - பாதுகாத்து. வீரவாகு தேவர் போவதைக் கண்ட அதிவீரன் தன்னுடைய படை களுடன் எழுந்து வழி மறித்தான். போர் தொடங்கியது. வீரவாகு
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/329
Appearance