310 கந்தவேள் கதையமுதம் தேவர் தனியாக இருந்தாலும் இறைவன் திருவருளை உள்ளத்தில் கொண்டு அந்தப் படைகளை எதிர்த்தார். சூரியன் தன் கதிர்களால் பனியையும் இருளையும் சிதற அடிப்பது போல அசுரக் கூட்டத்தை அழித்தார். தர பனிபடர் குழுமல் தன்னைப் பாயிருட் செறிவை அங்கிக் கனிபடர் பொற்பின் தோன்றும் காய்கதிர் முடிக்கு மாபோல் தனிப்டர் அவுணர் தானை தனிபடர் வீர வாகு நைந்திடச் சுடர்வான் ஒன்றால் தடித்தனன் திரித லுற்றான். (வீரசிங்கள் வதை. 12.) அவுணர் (குழுமல் - செறிவு. பனி, இருள் என்னும் இரண்டு செறிவையும். அங்கிக்கனி படர் பொற்பின் - அக்கினியாலான பழததைப் போன்ற பொலிவோடு. ரனை - அஈரர்களின் படை. தனி படர் - தனியாகச் சென்ற, தடிந்தனன்-வெட்டி.] வீரசிங்கன் என்பவன் சூலத்தை விட்டான். அதை வீரவாகு தேவர் தம் வாளால் இரண்டு துண்டு ஆக்கினார். பின்பு தழ் வாளை ஓச்சி அவன் கைகளை வெட்டி, தலையைச் சீவி, ஆழ்கடலிலே வீழ்த்தினார். வீரவாகு தேவர் முதல்முதலாகப் பெற்ற வெற்றி இது. வீரசிங்கன் அழிந்தான். இலங்கை வீழ்தல் இலங்கையில் மூன்று சிகரங்கள் இருந்தன. வீரவாகு தேவர் நடுவில் இருந்த சிகரத்தில் ஏறி ஒரு குதி குதித்தார். இலங்கை என்பது மகேந்திரபுரத்திற்கு வடக்கே இருப்பது. வீரவாகு தேவர் அதன் நடுக்குவட்டில் குதித்தார். அது கடலுக்குள் ஆழ்ந்து மூழ்கியது. அப்போது அங்கே இருந்த அசுரர்கள் எல்லாம் கலங் கினர்; கவலையுற்றார்கள்; புலம்பினார்கள். இலங்கைஇது பான்மையின் இருங்கடலுள் மூழ்கக் குலங்களொடு வைகிய கொடுந்தகுவர் யாரும் கலங்கினர்; அழுங்கினர்; கவன்றனர்; துவன்றி மலங்கினர்; புலம்பினர்; மருண்டனர்; வெருண்டார். (இலங்கை வீழ்.110.) [இது பான்மையின் இவ்வாறு,நகுவர் - அசுரர். கவன்றனர் - கவலையடைந்த னர். துவன்றி - கூடி- மலங்கினர் - மயங்கினர்) 3
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/330
Appearance