வீரவாகுவின் வீரச் செயல்கள் அதிவீரன் வதை 311 உடனே அதிவீரன் என்னும் அசுரன் வீரவாகு தேவரை எதிர்க்க வந்தான். அவன் தன் படைகளுடன் வீரவாகு தேவரை எதிர்த்தபோது அவற்றை எல்லாம் தேவர் அழித்தார். மேலும் மேலும் சண்டை நடந்தது. கடைசியில் தேவர் வாளினாலே அவனுடைய இரண்டு அடிகளையும்,முடியையும் துணித்து வீழ்த் தினார். எமன் அவன் உயிரைக் கொண்டு சென்றான். இடையு குந்ததி வீரன தடிகளோ ரிரண்டும் முடியும் ஆகமும் தோள்களும் ஆங்கொரு முறையே சுடர்பி றங்கிய வாளினால் ஆண்டகை துணித்துக் கடிது வீட்டினன்; நடுவன்வந் தவன்உயிர் கவர்ந்தான். (அதிவீரன் வதை. 87.) [ஆகம் -மார்பு. வீட்டினன் - வீழ்த்தினான். நடுவன் - யமன். ] வீரவாகு தேவர் மகேந்திரபுரத்தை அடைதல் மறுபடியும் வீரவாகு தேவர் எழுந்து ஆகாசத்தின் வழியே புறப் பட்டார். அப்போது கடலுக்குள் அமிழ்ந்திருந்த இலங்கை மீண்டும் மேலே எழுந்தது. பாரங்களை ஏற்றினவுடன் ஓடம் கொஞ்சம் கண்ணீருக்குள் அமிழ்ந்திருக்கும். பாரத்தை எடுத்த பிறகு அது மேலே மிதப்பது போல் இப்போது இலங்கை மேலே எழும்பி நின்றது. எழுந்து வான்வழிச் சேறலும் ஆர்கலி யிடையே விழுந்து கீழுறும் இலங்கைமீண் டெழுந்தது ; விரைவில் கழிந்த தொல்பரம் நீங்கிய காலையில் கடலூடு அழுந்து கின்றபொன் தோணியீச் சென்றிடும் அதுபோல். (சேறலும் - சென்றவுடன். ஆர்களியிடையே - சமுத்திரத்தின் நடுவில். தொல் பரம் - பழைய பாரம். மிச்சென்றிடும் அது போல் மேலே மிதப்பது போல.] . வான் வழியாகச் சென்ற வீரவாகு தேவர் வீர மகேந்திரபுரத் தின் வடதிசையில் சென்று பார்த்தார். அங்கே உள்ள கோபுரப் பக்கத்தில் கோரன், அதிகோரன் என்ற கொடிய வீரர்கள் படை களுடன் இருந்தார்கள். இவர்களோடு போர் தொடங்கிச் செய் தால் நாம் வந்த காரியம் தாமதப்படும். முருகப்பெருமான் எழுந்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/331
Appearance